2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘65.6 மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்’

Editorial   / 2017 ஜூன் 19 , பி.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகளாவிய ரீதியில், அகதிகளாக, சாதனை ரீதியாக, 65.6 மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளதாக, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.   

கடந்தாண்டு இறுதி வரையான, எதிர்வுகூறப்பட்ட மேற்கூறிய எண்ணிக்கையானது, 2015ஆம் ஆண்டிலிருந்து, 300,000ஆல் அதிகரித்துள்ளதாக, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் வருடாந்த அறிக்கை வெளிக்காட்டியுள்ளது.எவ்வாறெனினும், 2014-15ஆம் ஆண்டில் அதிகரித்த ஐந்து மில்லியனுடன் ஒப்பிடும்போது இது குறைவாகும்.   

எவ்வாறெனினும், மேற்கூறப்பட்ட நிலையானது, சர்வதேச இராஜதந்திரம் தோல்வியடைவதைக் காட்டுவதாக உள்ளது என, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் பிலிப்போ கிரான்டி தெரிவித்துள்ளார்.   

அமைதியை உருவாக்க முடியாததாக உலகம் மாறியுள்ளதாக மேலும் கூறிய கிரான்டி, பழைய மோதல்கள் தொடருவதையும், புதிய மோதல்கள் ஏற்படுவதையும் நீங்கள் காண்பீர்கள் எனவும், இவையிரண்டின் காரணமாகவும், இடப்பெயர்வு ஏற்படுமென்றும், போர்கள் எப்போதும் முடிவுக்கு வராது என்பதற்கான அடையாளமே, வலிந்த இடப்பெயர்வு எனத் தெரிவித்துள்ளார்.  

இதேவேளை, உலகில் இடம்பெயர்ந்தோரில் 84 சதவீதமானோர், வறிய, மத்திய வருமானத்தைக் கொண்ட நாடுகளிலேயே இருக்கின்ற நிலையில், உலகின் வறிய நாடுகளிலேயே சுமை இருப்பதாக, கிரண்டி கூறியுள்ளார்.   

செல்வந்த நாடுகள் அகதிகளை ஏற்க மறுக்கும்போது, மில்லியன் கணக்கான அகதிகளை ஏற்குமாறு, மிகக் குறைந்த வளங்களையுடைய ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, ஆசிய நாடுகளை எவ்வாறு கோருவதென, கிரண்டி வினவியுள்ளார்.   

இந்நிலையில், மேற்கூறப்பட்ட எண்ணிக்கைகள் மூலம், அகதிகளை ஏற்பது மட்டுமல்லாமல், சமாதானத்தை முன்னெடுப்பதிலும், மீள் கட்டுமானத்திலும் செல்வந்த நாடுகள் முதலிடும் என ஐக்கிய நாடுகள் கூறியுள்ளது.   

உலகிலேயே அதிகமாக, சிரியாவிலிருந்து 5.5 மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இது தவிர, 6-3 மில்லியன் சிரியர்கள், சிரியாவுக்குள் இடம்பெயர்ந்துள்ளனர். இதேவேளை, ஆப்கானிஸ்தானிலிருந்து 2.5 மில்லியன் பேரும், தென் சூடானிலிருந்து 1.4 மில்லியன் பேரும் இடம்பெயர்ந்துள்ளனர்.   

இந்நிலையில், உலகிலேயே அதிகபட்சமாக, 2.9 மில்லியன் அகதிகளை துருக்கி உள்ளெடுக்கின்ற நிலையில், பாகிஸ்தான், 1.4 மில்லியன் பேரையும், லெபனால் ஒரு பில்லியன் பேரையும் உள்ளெடுக்கின்றது. இது தவிர, ஈரான், 979,800 பேரையும், உகண்டா 940,800 பேரையும், எதியோப்பியா 791,600 பேரையும் உள்வாங்குகிறது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .