2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

நேபாள நிலச்சரிவுகளில் 12 பேர் பலி

Editorial   / 2020 செப்டெம்பர் 14 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நேபாளத்திலுள்ள இரண்டு கிராமங்களை பருவமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் நேற்று அடித்துச் சென்ற நிலையில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதாக நேபாள அரசாங்க அதிகாரி முராரி வஸ்டி தெரிவித்துள்ளார்.

சீனாவின் திபெத் பிராந்தியத்துடனான எல்லைக்கருகிலுள்ள நேபாளத் தலைநகர் காத்மண்டுவிலிருந்து 100 கிலோ மீற்றர் கிழக்காகவுள்ள பரஹ்பிஸேயில் பாரிய நிலச்சரிவொன்று வீடுகளையும், மக்களையும் அள்ளிச் சென்ற நிலையில் 10 பேர் கொல்லப்பட்டதுடன், 21 பேரைக் காணவில்லை என முராரி வஸ்டி குறிப்பிட்டுள்ளார்.

வட மேற்கிலுள்ள பக்லுங்கில் நிலச்சரிவொன்றில் இரண்டு பேர் இறந்துள்ளனர்.

இரண்டு நிலச்சரிவுகளும் அதிகாலைக்கு முன்னர் தாக்கிய நிலையில் பாதுகாப்பாக மக்கள் வெளியேற முடிந்திருக்கவில்லை என மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், காணாமல்போனோரை மீட்புப் பணியாளர்கள் தேடுவதாக முராரி வஸ்டி தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X