2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பளிங்குச் சுரங்கம் தகர்ந்ததில் பாகிஸ்தானில் 17 பேர் கொல்லப்பட்டனர்

Editorial   / 2020 செப்டெம்பர் 08 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாகிஸ்தானின் கிராமப்புறப் பகுதியொன்றிலுள்ள பளிங்குச் சுரங்கமொன்றில் நேற்று ஏற்பட்ட தகர்வொன்றில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டதுடன், 11 பேரைக் காணவில்லை என பொலிஸார் தெரிவித்ததுடன், பளிங்கை வெடிக்க வைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்களின் பயன்பாடு காரணமாக சுரங்கமானது நிலையற்று இருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், தப்பித்தவர்களைக் கண்டுபிடிக்கும் வகையில் பாகிஸ்தானிய படைவீரர்கள் உள்ளிட்ட மீட்புப் பணியாளர்கள்  தொடர்ந்து சிதைவுகளை இன்று தோண்டிய வண்ணமிருந்தனர்.

ஆப்கானிஸ்தானுடனான எல்லையிலுள்ள மேற்குப் பாகிஸ்தானின் ஸியாரட் பகுதியின் மொஹமன்டிலேயே குறித்த சுரங்கம் காணப்படுகிறது.

சுரங்கம் நேற்று மாலையில் தகரும்போது சம்பவ இடத்தில் 40 தொடக்கம் 50 வரையானோர் இருந்ததாக மாவட்ட பொலிஸ்  தலைவர் தாரிக் ஹபிப் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவத்தின் ஒன்பது பேர் காயமடைந்ததுடன், தமது குடும்பத்தவர்களை சம்பவ இடத்திலிருந்து நேரடியாக குடும்பங்கள் எடுத்துச் சென்ற நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை தெளிவில்லாமலுள்ளதாக கஹலானி மாவட்ட தலைமையக வைத்தியசாலை வைத்தியர் சமீன் ஷின்வாரி தெரிவித்துள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .