2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சம்பியனாகியது யாழ். மத்திய கல்லூரி

குணசேகரன் சுரேன்   / 2018 ஓகஸ்ட் 24 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில், யாழ். மாவட்ட கிரிக்கெட் சங்கம் ஒழுங்கமைத்து நடத்தும், பாடசாலைகளின் 17 வயதுக்குட்பட்டோருக்கான 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில், யாழ். மாவட்ட மட்டத்தில், வியாஸ்காந்த், இயலரசன் கைகொடுக்க யாழ். மத்திய கல்லூரி சம்பியனாகியது.

சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், சென். ஜோன்ஸ் கல்லூரியை வென்றே யாழ். மத்திய கல்லூரி சம்பியனாகியிருந்தது.  

இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய சென். ஜோன்ஸ் கல்லூரி, 35 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 101 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், இயலரசன் 10 ஓவர்கள் பந்துவீசி 11 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், கனிஸ்ரன் 8 ஓவர்கள் பந்துவீசி 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு, 102 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய யாழ். மத்திய கல்லூரி, 23 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. துடுப்பாட்டத்தில் வியாஸ்காந்த் ஆட்டமிழக்காமல் 62, கௌசிகன் 15 ஓட்டங்களைப் பெற்றனர்.

இறுதிப் போட்டியின் நாயகனாகவும் சிறந்த துடுப்பாட்ட வீரனாகவும் தேசிய 19 வயதுக்குட்பட்ட அணியில் இடம்பிடித்திருந்த வியாஸ்காந்த் தெரிவானதுடன், சிறந்த பந்துவீச்சாளராக இயலரசன் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X