2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சம்பியனானது கிளிநொச்சி இந்துக் கல்லூரி

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2018 செப்டெம்பர் 12 , பி.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கிரிக்கெட் தொடரில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி சம்பியனானது.

இத்தொடரில் பல பெரிய பாடசாலைகளை வீழ்த்தியிருந்த கிளிநொச்சி இந்துக் கல்லூரி, குருணாகல் அளவடகமயிலுள்ள விக்ரமசீல தேசிய பாடசாலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில், பொலனறுவை நெதிரிகிரிய தேசிய பாடசாலையைத் தோற்கடித்தே சம்பியனாகியது.

இறுதிப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி இந்துக் கல்லூரி 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 93 ஒட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், பிரதீசன் ஆட்டமிழக்காமல் 43, பார்த்திபன் 32 ஒட்டங்களைப் பெற்றனர்.

பதிலுக்கு, 95 ஒட்டங்கங்ளென்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய பொலனநறுவை நெதிரிகிரிய தேசிய பாடசாலை, 7.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 55 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 39 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. பந்துவீச்சில், பேவிசன் 5, பார்த்தீபன், பிரதீசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

அந்தவகையில், தேசிய மட்டத்தில் கிரிக்கெட்டில் சம்பியனான வட மாகாணத்தின் முதலாவது பாடசாலை என்ற பெருமையை கிளிநொச்சி இந்துக் கல்லூரி பெற்றுக் கொண்டது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .