2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சம்பியனானது சென்றலைட்ஸ்

குணசேகரன் சுரேன்   / 2018 செப்டெம்பர் 10 , பி.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறப்பான கட்டுக்கோப்பான பந்துவீச்சு, சிறப்பான களத்தடுப்பு என்பன எதிரணியின் ஆட்டங்களைக் கட்டுப்படுத்த, கௌதமனின் சிறப்பான துடுப்பாட்டம் வெற்றியிலக்கை இலகுவாக அடைய வழிகோல, யாழ். மாவட்ட பிரிவு மூன்று அணிகளுக்கிடையிலான தொடரில் சென்றலைட்ஸ் சம்பியனானது.

சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று  நடைபெற்ற இறுதிப் போட்டியில் விக்டோரியன்ஸ் அணியை வென்றே சென்றலைட்ஸ் சம்பியனானது.

குறித்த போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற சென்றலைட்ஸ் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய விக்டோரியன்ஸ் அணி, தொடக்கத்தில் கடுமையாக தடுமாறியது. ஒரு கட்டத்தில், 60 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் ஜோடி சேர்ந்த பிரணவன் - சாரங்கன் ஜோடி அணியை தூக்கி நிறுத்தியது. பிரணவன் 56, சாரங்கள் 50 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர். இறுதியில், விக்டோரியன்ஸ் அணி, 50 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், எரிக்துசாந்த் 3, சுஜன், அலன்ராஜ், டர்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு 190 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய சென்றலைட்ஸ், ஜெனோசன், கௌதமன், ஜெரிக்துசாந்த் ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டத்தால், 32.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில், கௌதமன் ஆட்டமிழக்காமல் 70, ஜெரிக்துசாந்த் ஆட்டமிழக்காமல் 24, ஜெனோசன் 36 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், சுஜிதரன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இறுதிப் போட்டியின் நாயகனாக சென்றலைட்ஸின் கௌதமனனும் சிறந்த துடுப்பாட்ட வீரராக விக்டோரியன்ஸின் பிரணவனும், சிறந்த பந்துவீச்சாளராக சென்றலைட்ஸின் ஜெரிக் துசாந்தும், சிறந்த களத்தடுப்பாளராக அதே அணியின் ஜெனோசனும் தெரிவாகினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .