2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சம்பியனானது தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம்

சுஜிதா   / 2017 ஜூன் 07 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


பாடசாலை மட்டத்திலான விளையாட்டுப் போட்டிகள், தற்போது நாடளாவிய நீதியில் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் மத்திய மாகாணத்தின் மாகாண மட்ட கரப்பந்தாட்டப் போட்டிகள், கண்டியில் தற்போது நடைபெற்று வருகின்றன.   

20 வயதுக்குட்பட்ட கரப்பந்தாட்ட அணிகளுக்கிடையிலான போட்டிகள், கண்டி நுகேவல தேசிய கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில், இன்று  (07) நடைபெற்றது. இதில், இறுதிப் போட்டியில், நுவரெலியா கல்வி வலயத்தைச் சேர்ந்த இரண்டு அணிகள் மோதின.

கொட்டக்கலை கேம்பிரிஜ் கல்லூரியும் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயமுமே இறுதிப் போட்டியில் மோதின. இதில், தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் சம்பியனானது.   
 

சம்பியனானதன் மூலம், 2015 ஆம் ஆண்டு முதல், தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தின் கரப்பந்தாட்ட அணி தொடர்ச்சியாக, மூன்றாவது ஆண்டாக தேசிய மட்ட போட்டிகளுக்குத் தெரிவாகியுள்ளமை விசேட அம்சமாகும். 2015, இவ்வாண்டில், மத்திய மாகாணத்தில் முதலிடத்தையும், 2016ஆம் ஆண்டில் மூன்றாமிடத்தையும், தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் பெற்றிருந்தது.   

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தின் வெற்றிக்காக உழைத்த அணி வீரர்கள், அவர்களுக்கு பயிற்சியளித்த ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் ஆலோசகர் ஆகியோரை,  தலவாக்கலை சமூகம் வாழ்த்தியுள்ளது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .