2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

13 வயதுப் பிரிவினருக்கான கிரிக்கெட் போட்டி சமநிலையில்

Kogilavani   / 2012 நவம்பர் 16 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                   (கு.சுரேன்)
யாழ்ப்பாணம்  மத்திய கல்லூரிக்கும் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்திற்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி சமநிலையில் முடிவுற்றது.

இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்திற்குட்பட்ட பாடசாலைகளின் 13 வயதுப் பிரிவினருக்கிடையில் மட்டுப்படுத்தப்படாத ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டி மேற்படி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்திற்குமான போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி, முதலில் துடுப்பெடுத்தாடியது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி  முதல் இனிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 107 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் மதுஸன் 31 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 21 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. தொடர்ந்து பலோ ஒன் முறையில் தமது இரண்டாவது இனிங்ஸினையும் துடுப்பெடுத்தாடக் களமிறங்கியது கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம். இரண்டாவது இனிங்ஸில் 7 விக்கெட்களை இழந்து 27 ஓட்டங்களை பெற்றபோது ஆட்டம் முடிவுக்கு வந்தது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .