2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

யாழில் பொன்னணிகளின் மோதல்

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 27 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

பொன்னணிகளின் மோதல் என வர்ணிக்கப்படும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லாரிக்கும் யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லாரிக்கும் இடையேயான 94ஆவது கிரிக்கெட் போட்டி - வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் ஆரம்பமாகியது.

வட்டுக்கோட்டை - யாழ்ப்பாணக் கல்லூரி அதிபரின் வரவேற்புரையைத் தொடர்ந்து இரு கல்லூரிகளினதும் கொடிகளை யாழ்ப்பாணக் கல்லூரி அதிபர் மற்றும் யாழப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரியின் உப அதிபரும் ஏற்றி வைத்தார்கள்.

இதனைத் தொடர்ந்து இரு அணிகளினதும் வீரர்கள் கல்லூரி அதிபர்கள் மற்றும் விருந்தினர்களுக்கும் அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து போட்டிக்காக பூவா தலையா போடப்பட்டது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி களத்தடுப்பில் ஈடுபட, யாழ்ப்பாணக் கல்லூரி துடுப்பாட்டத்தில் ஈடுபட்டது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக எம்.மதுசன், கே.பிரசோபனன் களமிறங்கினார்கள். முதல் ஓவரின் நான்காவது பந்தில் ஓட்டம் எதுவும் பெறாது மதுசன் - எரிக் பிரதாப்பின் பந்தில் விக்கெட்டை பறி கொடுத்து பவிலியன் திரும்பினார்.

யாரும் எதிர்பாராத வண்ணம் இடம்பெற்ற இந்த ஆட்டமிழப்பினை ஈடு செய்யும் வகையில் களமிறங்கிய அணித்தலைவர் ஆர்.பென்டில்ஹரன் நிதான விளையாடியதுடன் நிலைத்து நிற்கும் கவனத்தில் மிகவும் மெதுவாக இருவரும் ஓட்டங்களை பெற்றுக் கொண்டு இருந்த வேளையில் பெனில்ஹரன் 88 பந்துகளை சந்தித்து 20 ஓட்டங்களை மட்டும் பெற்ற நிலையில் நோபேட்டின் பந்தை அடிக்க முற்பட்டு ரியுஸ்ரீடரிடன் பிடி கொடுத்து 31.3 ஓவரில் அணியின் ஓட்ட எண்ணிக்கை 64 ஆக இருக்கும் போது வெளியேறினார்.

இவரைத் தொடர்ந்து இரண்டாவது ஆட்டக்காரராக எஸ்.மதுசன் களமிறங்கி அணியின் ஓட்டங்களை உயர்த்தும் நடவடிக்கையில் மிகவும் கவனமாக ஈடுபட்ட நிலையில் லிவிங்டனின் பந்தை அடிக்க முற்பட்டு எரிக் பிரதாப்பிடம் பிடிகொடுத்து 43.4 ஓவரில் வெளியேற அணியின் ஓட்ட எண்ணிக்கை 94 ஆக காணப்பட்டது.
மூன்றாவது ஆட்டக்காரராக ரி.நிரூசன் களமிறங்கி விளையாடிய போதிலும் இவரும் 42 பந்துகளில் 15 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் எரிக் பிரதாப்பின் பந்தை அடித்து ஜெகானிடம் பிடிகொடுத்து மைதானத்தைவிட்டு வெளியேறினார். 64.1 ஓவரில் 143 ஓட்டங்கள் காணப்பட்டது.
பிரசோபனுடன் ரி.பிரியலக்சன் இணைந்து கொண்டபோதிலும் ஓட்டங்களின் எண்ணிக்கை மிகவும் மெதுவாக ஏறிக்கொண்டு இருந்தது. பிரசொபனன் 206 பந்துகளை சந்தித்து ஒன்பது நான்குகளுடன் 79 ஓட்டங்களைப் பெற்று இருந்த வேளையில் எரிக் பிரதாப்பின் பந்தை அடித்து ஆட முற்பட்ட வேளையில் கவாஸ்கரிடம் பிடி கொடுத்து வெளியேறினார்.

கள நிலைமையை கருத்தில் கொண்டு களமிறங்கிய எஸ்.சிராளன் தனது பொறுப்பை உணர்ந்து மிகவும் மெதுவாக விளையாடிய போதிலும் பிரிய லக்சன் 20 பந்துகளில் 05 ஓட்டங்கள் பெற்ற நிலையில் எரிக் பிரதாப்பின் பந்து வீச்சில் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
கஜேந்திரன் களமிறங்கிய போதிலும் ஓட்டம் ஏற்றம் என்பது பெரும் கேள்வியாக காணப்பட்டது என்று கூறினால் மிகையாக மாட்டாது. 28 பந்துகளைச் சந்தித்து 04 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் எரிக் பிரதாப்பின் பந்தை அடித்து ஆட முற்பட்டு விக்கெட்டை இழந்து வெளியேறினார். 72.2 ஓவரில் 168 ஓட்டங்கள் என்ற நிலமை காணப்பட்டது.

சீராளனுடன் பி.அபிராஜ் இணைந்து கொண்டதுடன் கள நிலமை பாதகமாக இருப்பதை உணர்ந்து மிகவும் கவனத்துடன் தனது மட்டையைப் பயன்படுத்திக்கொண்டு ஓட்டங்களை பெற்றுக் கொண்டு இருந்த நிலையில் சீராளன் 35 பந்துகளை சந்தித்து 03 ஓட்டங்களை மட்டும் பெற்ற நிலையில் ஜஸ்ரினின் பந்து வீச்சுக்கு முகம் கொடுத்து அலிஸ்ரனிடம் பிடிகொடுத்து வெளியேற 83.2 ஓவரில் 178 ஓட்டங்கள் காணப்பட்டது.
கிரிசாந் மைதானத்தில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய நிலையில் போன வேகத்தில் 02 பந்துகளை சந்தித்த போதிலும் ஓட்டங்கள் எதனையும் பெறாது ஜஸ்ரினின் பந்து வீச்சில் ஜெகானிடம் பிடி கொடுத்து வெளியேற 83.4 ஓவரில் 178 ஓட்டங்கள் என்ற நிலைமை காணப்பட்டது.

இறுதி விக்கெட்டாக எ.மாதவரூபன் களமிறகிய நிலையில் அபிராஜ ஆட்மிழந்தார். இவர் 70 பந்துகளில் 18 ஓட்டங்கள் என்ற நிலையில் நோபேட்டின் பந்தை அடித்து ஆட முற்பட்டு விக்கெட்டை இழந்து வெளியேற மாதவரூபன் ஆட்டமிழக்காது 19 பந்துகளை சந்தித்து 05 ஓட்டங்களுடன் காணப்பட்டார்.

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரியைச் சேர்ந்த எரிக் பிரதாப் 21 ஓவர்கள் பந்து வீசி 06 ஓட்;டமற்ற ஓவர்களுடன் 34 ஓட்டங்களுக்கு 05 விக்கெட்டுக்களையும் ஜஸ்ரின் 09 ஓவர்கள் பந்து வீசி 02 ஓட்;டமற்ற ஓவர்களுடன் 12 ஓட்டங்களுக்க 02 விக்கெட்டுக்களையும் நோபேட் 15.2 ஓவர்கள் பந்து வீசி 06 ஓட்;டமற்ற ஓவர்களுடன் 22 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும் லிவிங்டன் 16 ஓவர்கள் பந்து வீசி 05 ஓட்டமற்ற ஓவர்களுடன் 27 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென் பற்றிக்ஸ் கல்லூரி முதல்நாளில் 07 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 07 ஓட்டங்களை பெற்றுள்ளது
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய ஜஸ்ரின் - ரியூடர் களமிறங்கி நிதானமாக விளையாடிய போதிலும் ரியூடர் 22 பந்துகளைச் சந்தித்து 03 ஓட்டங்களை பெற்று இருந்த வேளையில் பிரிய லக்சனின் பந்திற்கு முகம் கொடுத்து அடித்தாட முனைந்து சிராளனிடம் பிடி கொடுத்து வெளியேற அவருடைய இடத்திற்கு அஜித்டாhர்வின் களமிறங்கினார். இவர் ஓட்டங்கள் எதனையும் பெறாத நிலையிலும் ஜஸ்ரின் 08 பந்துகளை சந்தித்து 03 ஓட்டங்களுடனும் நேற்று சனிக்கிழமை போட்டிகளை தொடங்கினர்.

யாழ்ப்பாணக் கல்லூரியைச் சேர்ந்த பென்டில்ஹரன் 08 ஓவர்கள் பந்து வீசி 02 ஓட்டமற்ற ஓவர்களுடன் 31 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும் பிரியலக்சன் 17 ஓவர்கள் பந்து வீசி 05 ஓட்டமற்ற ஓவர்களுடன் 40 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும் கஜேந்திரன் 19 ஓவர்கள் பந்து வீசி 03 ஓட்டமற்ற ஓவாகளுடன் 40 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும் பிரசோபன் 09 ஓவர்கள் பந்து வீசி ஒரு ஓட்;டமற்ற ஓவருடன் 45 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும் ஸ்ரீகுகன் 15.5 ஓவர்கள் பந்து வீசி 06 ஓட்டமற்ற ஓவர்களுடன் 26 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் பெற்றார்கள்.

இரண்டாவது இனிங்ஸ் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய யாழ்ப்பாணக் கல்லூரி இரண்டாவது இனிங்சில் சோபிக்காத நிலையில் விளையாடியதுடன் சென் பற்றிக்ஸ் கல்லூரி தமக்கு கிடைத்த இரண்டு பிடிகளை நழுவ விட்டமையால் இலகுவாக பெற வேண்டிய வெற்றியையும் கூட தவறவிட்டார்கள் என்றே கூறலாம்.
யாழ்ப்பாணக் கல்லூரி 24 ஓவரில் 07 விக்கெட்டுக்களை இழந்து 52 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்;டம் நிறைவு பெற்றது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய பிரசோபனன் மற்றும் எம்.மதுசன் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த நிலையில் பிரசோபனன் 08 பந்துகளில் 05 ஓட்டங்களைப் பெற்ற வேளையில் ஜெகன் வீசிய பந்தை அடிக்க முற்பட்டு அஜித்டார்வினிடம் பிடி கொடுத்து வெளியேறினார். 1.4 ஓவரில் 07 ஓட்டங்கள் என்ற நிலை காணப்பட்டது.
இவருடைய இடத்திற்கு களமிறங்கிய பென்டில்ஹரன் - மதுசனுடன் இணைந்து கொள்ள மதுசன் 28 பந்துகளில் 10 ஓட்டங்களை பெற்று நிலையில் அலெஸ்ரின் வீசிய பந்தில் எரிக் பிரதாப்பி;டம் பிடிகொடுத்து வெளியேறினார். 09 ஓவர்கள் நிறைவில் 21 ஓட்டம் என்ற நிலை காணப்பட்டது.

எஸ்.மதுசன் களமிறங்கிய நிலையில் பென்டில்ஹரன் 18 பந்துகளை சந்தித்து ஓட்டம் எதனையும் பெறாத நிலையில் கிளின்டனின் பந்தை அடிக்க முற்பட்டு எரிக் பிரதாப்பிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

அடுத்து ஸ்ரீகுகன் இணைந்து கொண்ட போதிலும் அவர் 04 பந்துகளில் 01 ஓட்டம் பெற்ற நிலையில் அஜித் டார்வினினன் பந்து வீச்சில் எரிக் பிரதாப்பிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

நெருக்கடியான நிலையில் களமிறங்கிய பிரியலக்ஷன் - மதுசனுடன் இணைந்த போதிலும் மதுசன் 15 பந்துகளில் 11 ஓட்டங்கள் என்ற நிலையில் அலெஸ்ரின் வீசிய பந்தை அடிக்க அதனை எல்லைக்கோட்டுக்கு அருகில் வைத்து நோபேட் பிடியெடுக்க ஆட்மிழந்து வெளியேறினார்.

அபிராஜ் களமிறங்கிய நிலையில் ஆட்டத்தின் போக்கு மாறுமா இல்லையா என் நிலைமை காணப்பட்டது. ஆனால் பிரியலக்ஷன் 19 பந்துகளில் 04 ஓட்டங்களை பெற்ற நிலையில் குகபாலாவின் பந்தை அடிக்க முற்பட்டு ஆட்டமிழந்து வெளியேறினார்.

தொடர்ந்து இறங்கிய சீராளன் அமைதியாக விளையாடிய வேண்டிய நிலையில் பிடி கொடுத்து போதிலும் அதனை பற்றிக் கல்லூரி கைவிட்ட நிலையில் 06 பந்துகளில் ஒரு ஓட்டதைப் பெற்று நோபேட்டின் பந்து வீச்சில் விக்கெட்டை இழந்து வெளியேற 18.5 ஓவரில் 46 ஓட்டங்கள் என்ற நிலைமை காணப்பட்டது.

கஜேந்திரன் களமிறங்கி துடுப்பாட்டத்தை ஆரம்பித்தார். இருவரும் நிதானமாக விளையாடி ஆட்டத்தை சமநிலைக்கு இட்டுச்சென்றார்கள். களத்தில் அபிராஜ் 08 பந்துகளில் 09 ஓட்டங்களுடனும் கஜேந்திரன் 06 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது காணப்பட்டார்கள்.

யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரியைச் சேர்ந்த எரிக் பிரதாப் 09 ஓவர்கள் பந்து வீசி 03 ஓட்;டமற்ற ஓவர்களுடன் 23 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும் நோபேட் 06 ஒவர்கள் பந்து வீசி 04 ஒட்டமற்ற ஓவர்களுடன் 02 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும் குகபாலா 03 ஓவர்கள் பந்து வீசி ஒரு ஓட்டமற்ற ஓவருடன் 07 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் அஜித்டர்வின் 03 ஓவர்கள் பந்து வீசி ஒரு ஓட்டமற்ற ஓவருடன் 09 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.

போட்டியின் சிறந்த பெறுபேறுகளை பெற்ற வீரர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டதுடன் பணப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

சிறந்த துடுப்பாட்ட வீரர்களாக வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி வீரர் கே.பிரசோபனன், சென் பற்றிக்ஸ் கல்லூரியைச் சேர்ந்த வி.குகபாலாவும் தெரிவு செய்யப்பட்டார்கள்.

சிறந்த பந்து வீச்சாளராக சென் பற்றிக்ஸ் கல்லூரியைச் சேர்ந்த ஜெ.பி.எரிக் பிரதாப், யாழ்ப்பாணக் கல்லூரியைச் சேர்ந்த என்.கஜேந்திரனும் தெரிவு செய்யப்பட்டார்கள்.

சகலதுறை வீரனாக யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரியைச் சேர்ந்த ஜஸ்ரின் கிறேசியன் தெரிவு செய்யப்பட்டார்.

சிறந்த களத்தடுப்பாளராக யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரியைச் சேர்ந்த ஜே.அலெக்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.

சிறந்த இணைப்பாட்ட வீரர்களாக சென் பற்றிக்ஸ் கல்லூரியைச் சேர்ந்த விகுகபாலா - ஜஸ்ரிக்கிறேசியன் தெரிவு செய்யப்பட்டாhகள்.

ஆட்டநாயகனாக சென்பற்றிக்ஸ் கல்லூரியைச் சேர்ந்த ஜெ.பி.எரிக்பிரதாப் தெரிவு செய்யப்பட்டார்.

விசேட பரிசில்களை யாழ்ப்பாணக் கல்லூரியைச் சேர்ந்த அணித்தலைவர் பென்டில்ஹரன் மற்றும் யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரியைச் சேர்ந்த லிவிங்டன் ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .