2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கிளிநொச்சி மாவட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவுக்கு முதலிடம்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 20 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹேமந்த்,விவேகராசா)

கிளிநொச்சி மாவட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவு  முதலிடத்தைப் பெற்றுள்ளது.

பிரதேச செயலர் பிரிவுகளுக்கிடையில் நடத்தப்பட்ட  விளையாட்டு நிகழ்ச்சிகளின் இறுதி நாள் போட்டிகள்  நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. பிரதேச ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட அணிகளும் போட்டியாளர்களும் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டனர். இந்த இறுதிப் போட்டிகளின் போது அதிக புள்ளிகளைப் பெற்று கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவு முதலக்மிடத்தைப் பெற்றுக் கொண்டது.

கிளிநொச்சி நகரின் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிக்கு அந்த மாவட்டத்தின் அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தலைமை வகித்தார்.

இந்தப் போட்டியில் இரண்டாமிடத்தைக் கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவும் மூன்றாமிடத்தைப் பூ10நகரிப் பிரதேச செயலர் பிரிவும் பெற்றன.

இந்தப் போட்டியில் பிரதம விருந்தினர்களாக நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார், வடமாகாண விளையாட்டுத்துறை தொழில்நுட்ப ஆலோசர் விமலராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வடமாகாணத்தின் முதன்மையான விளையாட்டு அரங்காக இந்தப் பொதுவிளையாட்டு மைதானம் தரமுயர்த்தப்பட்டு இலங்கையின் முன்னணி மைதானங்களில் ஒன்றாக விரைவில் அமைக்கப்படுமென்பதுடன்,  இதற்காக 800 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும்  இந்த நிகழ்வில் உரையாற்றிய முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. சிறினிவாசன், கண்டாவளை பிரதேச செயலர்  சத்தியசீலன், பச்சிலைப்பள்ளிப் பிரதேச செயலர் முகுந்தன், கரைச்சிப் பிரதேச பிரதேச செயலர் நாகேஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட விளையாட்டுத்துறை அதிகாரி சதானந்தன், கிளிநொச்சி மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் மோகனபவன், பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர்கள், விளையாட்டுக்கழகங்களின் பிரதிநிதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பெருந்தொகையான பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .