2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

சண்டிலிப்பாய் கோட்டப் பாடசாலைகளுக்கிடையிலான கால்பந்தாட்டப் போட்டி

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 15 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கு.சுரேன்)


யாழ். சண்டிலிப்பாய் கோட்டப் பாடசாலைகளுக்கிடையிலான கால்பந்தாட்டப் போட்டியின் இறுதிப்போட்டியில் 14 வயதுப் பிரிவினருக்கான போட்டியில் சென்.ஜோசப் மகாவித்தியாலயமும் 16 மற்றும் 18 வயதுப் பிரிவினர்களுக்கான போட்டிகளில் மானிப்பாய் இந்துக் கல்லூரியும் வெற்றி பெற்றன.

சண்டிலிப்பாய் கோட்டப் பாடசாலைகளுக்கிடையிலான கால்பந்தாட்டப் போட்டியின் இறுதிப்போட்டி மானிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

14 வயதுப் பிரிவினருக்கான இறுதிப்போட்டியில் இளவாலை ஹென்றியரசர் கல்லூரியை எதிர்த்து மாதகல் சென்.ஜோசப் மகாவித்தியாலயம் மோதியது. தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய மாதகல் சென்.ஜோசப் மகாவித்தியாலயம் முதல் பாதி ஆட்டத்தில் ஒரு கோலைப் போட்டது. இரண்டாவது பாதி ஆட்டத்திலும்; அவ்வணி ஒரு கோலைப்; போட்டது. இறுதியில் சென்.ஜோசப் மகாவித்தியாலயம் 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

16 வயதுப் பிரிவினருக்கான இறுதிப்போட்டியில் மாதகல் சென்.ஜோசப் மகாவித்தியாலயத்தை எதிர்த்து மானிப்பாய் இந்துக் கல்லூரி மோதியது. முதல் பாதி ஆட்டத்தில் மானிப்பாய் இந்துக் கல்லூரி 2 கோல்களை போட்டது. இரண்டாவது பாதி ஆட்டத்தில் மேலும் ஒரு கோலை மானிப்பாய் இந்துக் கல்லூரி போட்டது. இறுதியில் மானிப்பாய் இந்துக் கல்லூரி 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

18 வயதுப் பிரிவினருக்கான இறுதிப்போட்டியில் மானிப்பாய் இந்துக் கல்லூரியை எதிர்த்து இளவாலை ஹென்றியரசர் கல்லூரி மோதியது. முதல் பாதி ஆட்டத்தில் மானிப்பாய் இந்துக் கல்லூரி அடுத்தடுத்து 2 கோல்களைப் போட்டது. இந்நிலையில் பதிலுக்கு ஒரு கோலைப் போட்ட ஹென்றியரசர் ஆட்டத்தில் விறுவிறுப்பை ஏற்படுத்தியது. இரண்டாவது பாதி ஆட்டத்தில்; மானிப்பாய் இந்துக் கல்லூரி ஒரு கோலைப் போட்டது. சிறிது நேரத்தில் இளவாலை ஹென்றியரசர் கல்லூரியும் ஒரு கோலைப் போட்டது. இருந்தும் மீண்டும் ஒரு கோலைப் போட்ட மானிப்பாய் இந்துக் கல்லூரி வெற்றியை உறுதிசெய்தது. இறுதியில் மானிப்பாய் இந்துக் கல்லூரி 4:2 என்றகோல் கணக்கில் வெற்றிபெற்றது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .