2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மாரிஸ் ஸ்டெல்லா மற்றும் மலியதேவ பாடசாலைகள் சம்பியனாக தெரிவு

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 22 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலோன் பிஸ்கட் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான பிளென்டி ஃபூட்ஸ் நிறுவனத்தின் முன்னணி தானிய ஆகாரமாக விளங்கும் சமபோஷ அனுசரணையுடன் நடைபெற்ற 15 வயதுக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையேயான கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி அண்மையில் அநுராதபுரத்தில் நிறைவடைந்தது. 
 
கடந்த செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதியுடன் ஆரம்பமான சமபோஷ 15 வயதுக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையேயான கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் 480 ஆண்கள் அணிகள் மற்றும் 120 பெண்கள் அணிகள் பங்குபற்றியதுடன், நாடு முழுவதுமிருந்து 600 பாடசாலைகளைச் சேர்ந்த 9000 இற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்குபற்றியிருந்தனர். நாடுமுழுவதும் உள்ள 30 நிலையங்களில் முதற்கட்ட சுற்றுப்போட்டிகள் நடைபெற்றன. ஒக்டோபர் மாதம் 11, 12 மற்றும் 13ஆம் திகதிகளில் நடைபெற்ற இறுதிச்சுற்று போட்டிகளில் 21 அணிகள் பங்குபற்றியிருந்தன.
 
இறுதிநாள் நடைபெற்ற போட்டிகளில் அநுராதபுரம் புனித. ஜோசப் கல்லூரி அணியினை வீழ்த்தி மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணியினர் ஆண்கள் பிரிவின் சம்பியன் பட்டத்தையும், கேகாலை பல்லேகனுகல கனிஷ்ட பாடசாலை அணியினை வீழ்த்தி பெண்கள் பிரிவின் சம்பியன் பட்டத்தை குருநாகல் மலியதேவ கல்லூரி அணியினரும் வென்றனர்.

பெண்கள் பிரிவில் வெற்றியீட்டிய குருநாகல் மலியதேவ கல்லூரி அணியினர்


பெண்கள் பிரிவின் இரண்டாம் இடத்தை பெற்ற கேகாலை பல்லேகனுகல கனிஷ்ட பாடசாலை


இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட பிளென்டி ஃபூட்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஷம்மி கருணாரத்ன அவர்கள் பெண்கள் பிரிவில் வெற்றியீட்டிய அணியினரிடம் வெற்றிக்கிண்ணத்தை கையளிப்பதை காணலாம்.


ஆண்கள் பிரிவில் வெற்றியீட்டிய நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா அணியினர்


ஆண்கள் பிரிவின் 2ஆம் இடத்தை பெற்ற அநுராதபுரம் புனித.ஜோசப் கல்லூரி அணியினர்


இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட பிளென்டி ஃபூட்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஷம்மி கருணாரத்ன அவர்கள் ஆண்கள் பிரிவில் வெற்றியீட்டிய அணியினரிடம் வெற்றிக்கிண்ணத்தை கையளிப்பதை காணலாம்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .