2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

உடுவில் மகளிர் கல்லூரி அணி சம்பியன்

Super User   / 2014 ஏப்ரல் 11 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா

யாழ் மாவட்ட கூடைபந்தாட்ட சங்கமும் யாழ் மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்த யாழ்.மாவட்டப் பாடசாலைகளின் 13 வயதுப் பிரிவு கூடைபந்தாட்ட அணிகளுக்கிடையில் நடத்திய கூடைப்பந்தாட்;டச் சுற்றுப்போட்டியில் உடுவில் மகளிர் கல்லூரி அணி சம்பியனாகியது.

மேற்படி சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி கடந்த புதன்கிழமை (09) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இந்த இறுதிப்போட்டியில் உடுவில் மகளிர் கல்லூரி அணியினை எதிர்த்து இராமநாதன் மகளிர் கல்லூரி அணி மோதியது.

முதல் சுற்றினை உடுவில் மகளிர் கல்லூரி அணி 15:03 என்ற புள்ளிகள் அடிப்படையில் வென்றது. தொடர்ந்து இரண்டாவது சுற்றினையும் 7:1 என்ற புள்ளிகள் அடிப்படையில் உடுவில் வென்றது. இறுதியில் உடுவில் மகளிர் கல்லூரி அணி 22:04 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றுச் சம்பியனாகியது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .