2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இறுதிப்போட்டிக்கு விம்பிள்டன் அணி தெரிவு

Super User   / 2014 ஏப்ரல் 15 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்


புத்தளம் கால்பந்தாட்ட லீக் நடாத்தும் நியூ ஸ்டார்ஸ் வெற்றிக்கிண்ணத்துக்கான கால்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டிக்கு புத்தளம் நகரின் மிகப்பலம் வாய்ந்த விம்பிள்டன் அணி தெரிவாகியுள்ளது.

இந்த போட்டி தொடரின் முதலாவது அரை  இறுதி ஆட்டம் சனிக்கிழமை (12) புத்தளம் சாகிரா தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது. விம்பிள்டன் அணியோடு யாழ் முஸ்லிம் யுனைட்டட் அணி எதிர்த்தாடியது.

போட்டி முடியும் வரை இரு அணிகளும் எவ்வித  கோல்களையும் பெறாத நிலையில் கொடுக்கப்பட்ட தண்ட உதையில் விம்பிள்டன் அணி 08:07 கோல்களினால் வெற்றி பெற்று இறுதி ஆட்டத்துக்கு தெரிவாகியுள்ளது.

போட்டிக்கு நடுவர்களாக எஸ்.எம்.ஜிப்ரி, எம்.ஆர், எம். அம்ஜத், எம்.எம்.சிபான் ஆகியோர் கடமையாற்றினார்.

இந்த போட்டி தொடரின் இறுதிப்போட்டி வெள்ளிக்கிழமை (18)  கோலாகலமாக இடம்பெற உள்ள நிலையில் விம்பிள்டன் அணியோடு,  இரண்டாவது அரை இறுதி போட்டியில்  கலந்து கொள்ளும் லிவர் பூல், நியூ பிரண்ஸ் அணிகளில் வெற்றி பெறும் அணி போட்டியிடவுள்ளது.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .