2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இலுப்படிச்சேனை கிராம புத்தாண்டு விளையாட்டு

Super User   / 2014 ஏப்ரல் 22 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


சேவ் த சில்ரன் (Save the children ) அமைப்பின் நிதியுதவியுடன் கிறிஸ்தவ இளைஞர் சம்மேளன ( Y.M.C.A ) அமைப்பின் ஏற்பாட்டில் நலிவுற்ற பெண்களை ஊக்குவிக்கும் முகமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் இலுப்படிச்சேனை கிராமத்தில் சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு நிகழ்வு திங்கட்கிழமை (21) மாலை நடைபெற்றது.
 
இலுப்படிச்சேனை மகாலட்சுமி மகளீர் சுயமுன்னேற்றக்குழுவின் தலைவி திருமதி.கருணாகரன் சசிகலா அவர்களின் தலைமையில் இலுப்படிச்சேனைபொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் சேவ் த சில்ரன் அமைப்பின் பால் நிலை தொடர்பான பிரச்சினைகளுக்கான  ஆலோசகர் பொ.புவனேஸ்வரி கிறிஸ்தவ இளைஞர் சம்மேளன அமைப்பின் பால் நிலைஉத்தியோகத்தர் திருமதி.லாவண்யா நிகழ்ச்சித் திட்டத்தின் வெளிக்கள உத்தியோகத்தர் திருமதி. பிரசாந்தி வெளிக்கள உத்தியோகத்தர்களான எஸ்.பயஸ், க.அன்புராஜ்;  மற்றும் இலுப்படிசேனை, வவுணதீவு, கொத்திலாபுலை, வாழைக்காலை, போன்ற பிரதேசங்களின் இளைஞர் யுவதிகளும் கிராம அபிவிருத்தி மற்றும் சமூர்த்தி சங்கங்களின் அங்கத்தவர்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
 
இதன்போது மரதன் ஓட்டம், கயிறு இலுத்தல், முட்டியுடைத்தல், பலூன் ஊதிஉடைத்தல், மாஊதி காசெடுத்தல், வழுக்குமரம் ஏறுதல் போன்ற பாரம்பரிய விளையாட்டுக்கள் நடைபெற்றன.
 
இலுப்படிச்சேனை மகாலட்சுமி மகளீர் சுயமுன்னேற்றக் குழுவின் உறுப்பினர்களின் முயற்சியினால் நடைபெற்ற இந்நிகழ்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
இந்நிகழ்வில் கலந்து கொண்ட சேவ் த சில்ரன் அமைப்பின் பால் நிலை தொடர்பான பிரச்சினைகளுக்கான ஆலோசகர் பொ. புவனேஸ்வரி அவர்கள் இதன்போது கருத்துதெரிவிக்கையில..
 
இந்த மகாலட்சுமி மகளீர் சுயமுன்னேற்றக்குழுவின் முயற்சியானது மிகவும்  பாராட்டுதற்குரியது  இவ்வாறான சேவைகளுக்கும், முயற்சிகளுக்கும், எதிர்காலத்தில் செயற்படுத்துவதற்கு எமது அமைப்பின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .