2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

இராணுவத்தின் ஏற்பாட்டிலான எல்லே போட்டிகள்

Super User   / 2014 ஜூலை 02 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-   சொர்ணகுமார் சொரூபன்


யாழ். இராணுவப் படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் எல்லேச் சுற்றுப்போட்டி எதிர்வரும் 5 ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளில் யாழில் நடைபெறவுள்ளதாக பிரிகேடியர் டட்லி வீரமத் இன்று புதன்கிழமை (02) தெரிவித்தார்.

யாழ். காங்கேசன்துறை தல்சேவன விருந்தினர் விடுதியில் இன்று புதன்கிழமை (02) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

மேற்படி சுற்றுப்போட்டிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் எதிர்வரும் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள.

தொடர்ந்து போட்டிகள் யாழ். துரையப்பா விளையாட்டரங்கு, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானம் மற்றும் பலாலி இராணுவ மைதானம் ஆகியவற்றில் இடம்பெறவுள்ளன.

ஆண்கள், பெண்கள் போட்டிகளாக இடம்பெறவுள்ள  எல்லேச் சுற்றுப்போட்டியில் தெற்கிலிருந்து 13 ஆண்கள், 3 பெண்கள் என 16 அணிகளும், யாழ்ப்பாணத்திலிருந்து 3 ஆண்கள், 4 பெண்கள் என 7 அணிகளும், முப்படைகளிலிருந்து 6 ஆண்கள், 1 பெண்கள் என 7 அணிகளும் பொலிஸ் திணைக்களத்திலிருந்து 1 ஆண்கள் அணியுமாக மொத்தம் 31 அணிகள் பங்குபற்றவுள்ளன.

1960 - 1980 ஆம் ஆண்டுகள் காலப்பகுதியில் இலங்கையின் தேசிய விளையாட்டாக இருந்த எல்லே விளையாட்டினை மீண்டும் புதுப்பொலிவு பெற வைக்கும் முயற்சியாக இந்தச் சுற்றுப்போட்டி நடத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், யாழ்ப்பாணத் தெரிவு அணிக்கும் அவுஸ்திரேலிய இளைஞர் அணிக்கும் இடையிலான துடுப்பாட்டப் போட்டியொன்றையும் 4 ஆம் திகதி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .