2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

61,000 ரூபாய்க்கு வினோத்

குணசேகரன் சுரேன்   / 2017 ஜூன் 09 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


கிறாஸ்கொப்பர்ஸ் பிறீமியர் லீக்கின் இவ்வாண்டுக்கான ஏலத்தில், மானிப்பாய் பரிஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் வினோத், 61,000 ரூபாய்க்கு, நோர்த் ட்ரகன்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.   

தெல்லிப்பழை கிறாஸ்கொப்பர்ஸ் விளையாட்டுக் கழகம் நடத்தும் கிறாஸ்கொப்பர்ஸ் பிறீமியர் லீக்கின் இரண்டாவது பருவகாலப் போட்டிகள், தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மைதானத்தில், இம்மாதம் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அணிக்கு ஆறு பேர் கொண்டதாகவும், ஐந்து ஓவர்களைக் கொண்டதாகவும் இச்சுற்றுப் போட்டி நடைபெறுகின்றது.  

இப்பருவகாலத்திலும் 6 அணிகள் களமிறங்குகின்றன. சயன்ஸ் வேர்ள்ட் தனியார் கல்வி நிறுவனத்தின் சயன்ஸ் வேர்ள்ட் கிங்ஸ், டில்கோ சிற்றி ஹொட்டலின் டில்கோ றைடர்ஸ், சிவன் அறக்கட்டளையின் சிவன் வொரியர்ஸ், தின்னை ஓகானிக்ஸின் டொப் சலஞ்சர்ஸ், இலண்டன் நண்பர்கள் இணைந்து எடுத்த டீப் டைவர்ஸ், டி.எம்.கே. பிறதர்ஸின் நோர்த் ட்ரகன்ஸ் என்றவாறு, அந்த ஆறு அணிகளும் காணப்படுகின்றன.   

இவ்வணிகளுக்கு, வீரர்களை உள்வாங்குவதற்கான ஏலம், டில்கோ விருந்தினர் விடுதியில், நேற்று (08) இரவு நடைபெற்றது. யாழ். மாவட்டத்திலுள்ள 22 கிரிக்கெட் அணிகளின் வீரர்கள், ஏலம் விடப்பட்டனர். கிறாஸ்கொப்பர்ஸ் அணியின் ஆறு வீரர்களும், மற்றைய 21 அணிகளில், தலா நான்கு வீரர்களும் ஏலம் விடப்பட்டனர்.   

ஒரு வீரரின் ஆரம்ப விலையாக, 2,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. ஒவ்வோர் அணியும், கடந்த முறையில் தங்கள் அணியில் விளையாடிய ஒரு வீரரை, 5,000 ரூபாய் தொகையில் தக்க வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. தக்க வைத்த வீரரைத் தவிர, ஒவ்வோர் அணியும், தலா ஏழு வீரர்களை வாங்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் ஏலம் நடைபெற்றது.   

கடந்த முறை கிறாஸ்கொப்பர்ஸ் பிறீமியர் லீக்கில், தொடர் நாயகன் விருது வென்ற, மானிப்பாய் பரிஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் வினோத்துக்கு, ஏலத்தில் அதிக கேள்வி காணப்பட்டது. அவரை ஏலம் எடுக்க அணிகள் போட்டிபோட்டன. இறுதியில், நோர்த் ட்ரகன்ஸ் அணி, 61,000 ரூபாய்க்கு அவரை வாங்கியது.   

அடுத்த கேள்வி கூடிய வீரராக, சென்றலைட்ஸ் அணியின் பூபாலசிங்கம் டார்வின் காணப்பட்டார். அவரை, டொப் சலஞ்சர்ஸ் அணி, 37,000 ரூபாய்க்கு வாங்கியது. மூன்றாவது கூடிய ஏலத்தொகையில், சென்றலைட்ஸ் அணியின் ரவி வதுஸன், டீப் டைவர்ஸ் அணியால், 33,000 ரூபாய்க்கு வாங்கப்பட்டார்.   

ஒவ்வோர் அணியும் ஏலம் எடுத்த வீரர்களும், அவர்கள் சார்ந்த அணிகளின் விபரமும், அவர்கள் ஏலம் எடுக்கப்பட்ட தொகைகளும் வருமாறு,  

சிவன் வொரியர்ஸ் - வி. றஜீவ்குமார் (சென்றல் - அணித்தலைவர், 5,000 ரூபாய்), குகதாஸன் ரசிகரன் (ஹாட்லியைற்ஸ் - 2,000 ரூபாய்), ஜூவா பிரசாத் (ஹாட்லியைற்ஸ் - 2,000 ரூபாய்), டி.சுதர்சன் (சென்றல் - 2,000 ரூபாய்), ஜெகதீஸ்வரன் சாஹித்யன் (ஹாட்லியைற்ஸ் - 4,500 ரூபாய்), தவராஜா பிரதீப் (ஹாட்லியைற்ஸ் - 2,000 ரூபாய்), புவனேஸ்வரன் தயாளன் (யூனியன்ஸ் - 10,500 ரூபாய்), ஏ.எம்.நோபேர்ட் (பற்றீசியன்ஸ் - 2,000 ரூபாய்).   

டில்ஹோ றைடர்ஸ் - குகபிரசாத், குகதர்மலிங்கம் சாரங்கன் (கிறாஸ்கொப்பர்ஸ் - 2,000 ரூபாய்), கிரிதரன் மதுசன் (ஜொலிஸ்ரார்ஸ் - 14,000 ரூபாய்), கிருஸ்ணானந்தன் பிரதீஸன் (கொக்குவில சி.சி.சி - 2,000 ரூபாய்), சிவசண்முகநாதன் மதுசன் (ஓல்ட்கோல்ட் - 4,000 ரூபாய்), எஸ்.மோகன்ராஜ் (ஸ்ரீகாமாட்சி - 2,000 ரூபாய்), ஜெலாம் கல்கோவன் (ஜொலிஸ்ரார்ஸ் - 2,000 ரூபாய்), சிவதர்ஸன் கிசோக்குமார் (மானிப்பாய் பரிஸ் - 2,000 ரூபாய்).  

சயன்ஸ் வேர்ள்ட் கிங்ஸ் - ஏலாளசிங்கம் ஜெயரூபன் (கொக்குவில் சி.சி.சி - அணித்தலைவர் - 5,000 ரூபாய்), இரவீந்திரன் மதுசன் (ஜொலிஸ்ரார்ஸ் - 10,000 ரூபாய்), கனகநாயகம் சுஜந்தன் (24,000 ரூபாய்), குலேந்திரன் செல்ரன் (சென்றலைட்ஸ் - 7,000 ரூபாய்), ஆறுமுகராசா சுகந்தன் (டிறிபேர்க் - 2,000 ரூபாய்), எஸ்.சுஜன் (ஸ்ரீகாமாட்சி - 2,000 ரூபாய்). செல்வராசா நிரோசன் (ஓல்ட் கோல்ட் - 22,000 ரூபாய்).   

டீப் டைவர்ஸ் - கவிந்தன் (அரியாலை, அணித்தலைவர் - 5,000 ரூபாய்), இராஜேஸ்குமார் சரண்ராஜ் (கிறாஸ்கொப்பர்ஸ் - 10,000 ரூபாய்), தெய்வேந்திரம் பிரியலக்சன் (ஓல்ட் கோல்ட்ஸ் - 25,500 ரூபாய்), ரவி வதூஸன் (சென்றலைட்ஸ் - 33,000 ரூபாய்), எஸ்.ஜேம்ஸ் ஜான்சன் (சென்றலைட்ஸ - 5,500 ரூபாய்), நவரட்ணம் சுரேந்திரன் (திருநெல்வேலி சி.சி.சி - 16,500 ரூபாய்), தவராசா கோபிராம் (அரியாலை - 2,000 ரூபாய்), சரவணபவனந்தன் லினோர்த்தன் (அரியாலை - 16,000 ரூபாய்).   

டொப் சலஞ்சர்ஸ் - ஏ.அன்புஜன் (ஜொனியன்ஸ் - அணித்தலைவர், 5,000 ரூபாய்), சூரியகுமார் அஜித் (கிறாஸ்கொப்பர்ஸ் - 18,000 ரூபாய்), கனகநாயகம் பபிதரன் (கொக்குவில் சி.சி.சி - 11,000 ரூபாய்), பூபாலசிங்கம் டார்வின் (சென்றலைட்ஸ் - 37,000 ரூபாய்), ராசா கஜானந்த் (ஜொலிஸ்ரார்ஸ் - 12,000 ரூபாய்), தேவராஜா கஜீபன் (ஜொனியன்ஸ் - 2,000 ரூபாய்), குலவீரசிங்கம் ஜனுதாஸ் (கொக்குவில் சி.சி.சி - 14,000 ரூபாய்), நீலமேகம் பகீரதன் (ஜொலிஸ்ரார்ஸ் - 2,000 ரூபாய்).   

நோர்த் ட்ரகன்ஸ் - பேரின்பராஜா பிருந்தாகரன் (ஜொனியன்ஸ் - அணித்தலைவர், 5,000 ரூபாய்), தேவராசா டிலோசன் (கிறாஸ்கொப்பர்ஸ் - 7,000 ரூபாய்), அலிஅக்பர் சஞ்சயன் (ஜொனியன்ஸ் - 30,000 ரூபாய்), சிவசுப்பிரமணியம் வினோத் (மானிப்பாய் பரிஸ் - 61,000 ரூபாய்), ஜெயபாலசிங்கம் ஜனந்தன் (யூனியன்ஸ் - 21,000 ரூபாய்), தங்கராஜா அருண்ராஜ் (திருநெல்வேலி வை.எம்.எச்.ஏ - 2,000 ரூபாய்), பாக்கியநாதன் சிறிகுகன் (ஓல்ட்கோல்ட் - 25.000 ரூபாய்), ஜி.றதீசன் (பற்றீசியன் - 15,000 ரூபாய்).   

ஆறு அணிகளும், இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில், டில்ஹோ றைடர்ஸ், நோர்த் ட்ரகன்ஸ், டீப் டைவர்ஸ் ஆகிய அணிகளும், பி பிரிவில், சயன்ஸ் வேர்ள்ட் கிங்ஸ், டொப் சலஞ்சர்ஸ், சிவன் வொரியர்ஸ் அணிகளும் உள்ளடங்குகின்றன.   

முதற் சுற்றுப் போட்டிகள் லீக் முறையில் இடம்பெற்று, ஒவ்வொரு பிரிவிலும் முதலிரு இடங்களையும் பெற்ற அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும். தொடர்ந்து அரையிறுதிப் போட்டிகள், இறுதிப் போட்டி என்பன நடைபெறும்.   

இச்சுற்றுப் போட்டியின் பிரதான நடுவராக, ஏ.எஸ். நிசாந்தனும், சுற்றுப் போட்டியின் நிர்வாக செயற்பாட்டு அதிகாரியாக கே. கோபிகிருஸ்ணனும் செயற்படுகின்றனர். வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டு, கிரிக்கெட் போட்டி நடைபெறுவது, யாழ்ப்பாணத்தில் இது இரண்டாவது தடவையாகும்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .