2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இரண்டு பிரிவுகளிலும் சம்பியனாகியது ஹாட்லிக் கல்லூரி

குணசேகரன் சுரேன்   / 2018 ஜூன் 06 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வட மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியின் ஓர் அங்கமான, சதுரங்கப் போட்டியில் ஆண்களுக்கான 17, 20 வயதுப் பிரிவுகளில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி அணி சம்பியனாகியது.

வட மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் வட மாகாணப் பாடசாலைகளுக்கிடையில் வருடாந்த விளையாட்டுப் போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது.

இதில் ஆண்களுக்கான சதுரங்கப் போட்டிகள் கொக்குவில் இந்துக் கல்லூரியில் நடைபெற்றது.

17 வயதுப் பிரிவு ஆண்களுக்கான சதுரங்கப் போட்டியில், 28 பாடசாலைகளைச் சேர்ந்த சதுரங்க அணிகள் பங்குபற்றின. இதில், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி அணி சம்பியனாகியது. இரண்டாமிடத்தை கொக்குவில் இந்துக் கல்லூரி அணியும் மூன்றாமிடத்தை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணியும் பெற்றுக் கொண்டன.

20 வயதுப் பிரிவு ஆண்களுக்கான சதுரங்கப் போட்டியில், 26 பாடசாலைகளைச் சேர்ந்த சதுரங்க அணிகள் பங்குபற்றின. இதிலும் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி அணி சம்பியனாகியது. இரண்டாமிடத்தை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணியும் மூன்றாமிடத்தை கொக்குவில் இந்துக் கல்லூரி அணியும் பெற்றுக் கொண்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .