2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஊவா, வடமத்தி வென்றன

கே.எல்.ரி.யுதாஜித்   / 2018 ஜூன் 04 , பி.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

44 ஆவது தேசிய விளையாட்டு விழாவுக்கான கடற்கரைக் கபடிப் போட்டியில், ஆண்களில் ஊவா அணியும் பெண்களில் வட மத்திய அணியும் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டன.

மட்டக்களப்பு கல்லடிக் கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டு பிரிவு இறுதிப் போட்டியிலும் விளையாடிய கிழக்கு மாகாண ஆண், பெண் அணிகள் இரண்டாம் இடங்களைப் பெற்றுக் கொண்டன.

ஆண்களுக்கான இறுதிப் போட்டியில், 40- 28 என்ற புள்ளிகள் கணக்கில் ஊவா அணி கிழக்கு அணியை வென்றதுடன், பெண்களில், 48-41 என்ற புள்ளிகள் கணக்கில் கிழக்கு அணியை வட மத்திய அணி வென்றிருந்தது.

பரிசளிப்பு நிகழ்வில், மட்டக்களப்பு மாநகர பிரதி மேயர் கே. சத்தியசீலன், விளையாட்டுத் திணைக்கள பணிப்பாளர் ஐ.பி. விஜயதிலக, கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர் என். மதிவண்ணன், மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் எஸ். ஈஸ்பரன், திருகோணலை மாவட்ட விளையாடடு உத்தியோகத்தர் ஏ. விமலசேன உள்ளிட்டோரும் மாநகர சபை உறுப்பினர்கள், விளையாட்டு உத்தியோகத்தர்களும் கலந்து கெண்டனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பங்குபற்றுதலுடன் இரத்தினபுரியில் நடைபெறவுள்ள 44ஆவது தேசிய விளையாட்டு விழாவை முன்னிட்டு நடைபெறும் விளையாட்டுகளில் கடற்கரை கபடிப் போட்டிகள் மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியிருந்தது.

அன்றைய ஆரம்ப நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர மேயர் தி. சரவணபவன், பிரதி மேயர் கே. சத்தியசீலன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்த், விளையாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி. கேரத், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே. குகநாதன், மாநகர சபை உறுப்பினரும் விளையாட்டு உத்தியோகத்தர்களுமான எஸ். பூபால்ராஜ், கே. ரூபராஜ், கபடிப் பயிற்றுவிப்பாளர் து. மதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஒன்பது மாகாணங்களின் அணிகளின் பங்கேற்புடன் ஞாயிற்றுக்கிழமை வரை 18 போட்டிகள் மட்டக்களப்பில் நடைபெற்றிருந்தன.

இவ்வாண்டுக்கான தேசிய விளையாட்டு விழா எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விளையாட்டுத்துறை அமைச்சர், ஏனைய அமைச்சர்களின் பங்குபற்றலுடன் நடைபெறவுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .