2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கமல் ராஜுக்கு வெள்ளி, ஜெனுஷனுக்கு வெண்கல பதக்கங்கள்

Editorial   / 2019 நவம்பர் 03 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

அகில இலங்கை மெய்வல்லுநர் போட்டிகளில் ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் கொழும்பைச் சேர்ந்த கமல் ராஜ் மற்றும் மன்னாரைச் சேர்ந்த ஜெனுஷன் ஆகியோர் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களைப் பெற்று சாதனை நிலைநாட்டியுள்ளனர்.   

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும்  35ஆவது அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளின் மூன்றாம் நாளான கடந்த வெள்ளிக்கிழமை மேலும் 13 போட்டிச் சாதனைகள் முறியடிக்கப்பட்டன.

இதன்படி, போட்டிகளின் முதல் நாளன்று 4 சாதனைகளும், இரண்டாம் நாளன்று 11 புதிய சாதனைகளும் நிலை நாட்டப்பட்டு ஒட்டுமொத்தமாக 28 புதிய போட்டிச் சாதனைகள் இதுவரை முறியடிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதன்போது, 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான நீளம்பாய்தல் போட்டியில் பங்குகொண்ட வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த கமல் ராஜ் வெள்ளிப் பதக்கம் வென்றார். போட்டியில் அவர் 7.19 மீற்றர் தூரத்தைப் பாய்ந்தார்.

அண்மையில் நிறைவுக்குவந்த கனிஷ்ட தேசிய மெய்வல்லுநரில் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தலில் தங்கப் பதக்கம் வென்ற கமல் ராஜ், 20 வயதுக்கு உட்பட்ட வயதுப்பிரிவில் அதிசிறந்த வீரராகவும், கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் வருடத்தின் அதிசிறந்த கனிஷ்ட மெய்வல்லுநராகவும் தெரிவாகியிருந்தார்.

இதேநேரம், கனிஷ்ட மெய்வல்லுநர் கமல் ராஜுடன் போட்டியிட்டு வெண்கலப் பதக்கம் வென்ற கேகாலை புனித மரியாள் கல்லூரியின் ஆர். தஸநாயக்க (7.28 மீற்றர்) இம்முறை அகில இலங்கை மெய்வல்லுநரில் தங்கப் பதக்கத்தினையும் வெற்றிகொள்ள, அதே கல்லூரியைச் சேர்ந்த எம். யோசதிங்க (7.16 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தினையும் சுவீகரித்தார்.

இதேவேளை, குறித்த போட்டியில் பங்குகொண்ட அநுராதபுரம் விஜிதபுர விஜித மகா வித்தியாலய மாணவன்  மொஹமட் அரூஸ் 6.69 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து ஏழாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

ஜெனுஷனுக்கு மூன்றாமிடம்

18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் கொண்டச்சி முஸ்லிம் கலவன் பாடசாலையைச் சேர்ந்த கே.பி ஜெனுஷன் வர்ண சாதனையுடன் வெண்கலப் பதக்கத்தைச் சுவீகரித்தார். போட்டியில் அவர் 6.99 மீற்றர் உயரத்தைப் பதிவு செய்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .