2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கால்பந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவருக்கு செல்வம் எம்.பி வாழ்த்து

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2017 ஜூலை 04 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் 2017ஆம் ஆண்டு தொடக்கம் 2021ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகத்தின் உபதலைவராக, மன்னார் மாவட்ட கால்பந்தாட்ட லீக்கின் தலைவர் ஞானப்பிரகாசம் டேவிட்சன் (ஜெறாட்) தெரிவு செய்யப்பட்டுள்ளமையின் மூலம், தமிழ்த் தலைமைத்துவத்துவத்துக்கு, மீண்டும் ஓர் அங்கிகாரம் கிடைத்துள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.   

இவ்விடயம் தொடர்பில் அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,  
“இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் 2017ஆம் ஆண்டு தொடக்கம் 2021ஆம் ஆண்டு வரையான புதிய நிர்வாகத்துக்கான தெரிவுக் கூட்டமானது, அகில உலக, ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனங்களின் பிரதிநிதிகள் முன்னிலையில், இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சின் ஒன்று கூடல் மண்டபத்தில், கடந்த சனிக்கிழமை (01) நடைபெற்றுள்ளதாக அறிகிறேன்.  

“இத்தேர்தலில், வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, மன்னார் மாவட்ட கால்பந்தாட்ட லீக்கின் தலைவர் ஞானப்பிரகாசம் டேவிட்சன், உப தலைவர் பதவிக்கு போட்டியிட்டு இலங்கை முழுவதுமாக பலமாக இருந்த எதிரணியாகிய றஞ்சித் றொட்றிகோ அணியைத் தோற்கடித்து உப தலைவராகத் தெரிவாகி, மன்னார் மாவட்டத்துக்கும் வட மாகாணத்துக்கும் பெருமை சேர்த்துள்ளளார்.  

“வடக்கு, கிழக்கில் உள்ள 17 லீக்குகளும் ஒற்றுமையாக இணைந்து செயற்பட்டுள்ளதன் காரணத்தினால், தமிழராக ஒருவர், வட மாகாணத்தில் இருந்து, அதுவும் மன்னார் மாவட்டத்தில் இருந்து இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் உபதலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  

“குறித்த தெரிவுக்காக, ஆதரவு வழங்கிய வடக்கு, கிழக்கு உள்ளிட்ட லீக் பிரதிநிதிகளுக்கு, எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகின்றேன். இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவராக, வடக்கில் உள்ள தமிழர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை பாரிய அதிர்ஷ்டமாகவே நான் கருதுவதோடு, தமிழ் தலைமைத்துவத்துத்துக்கு மீண்டும் ஓர் அங்கிகாரம் கிடைத்துள்ளதாக நான் கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .