2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சம்பியனாகியது குருநகர் பாடுமீன்

குணசேகரன் சுரேன்   / 2018 ஒக்டோபர் 12 , பி.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரியாலை சரஸ்வதி விளையாட்டுக் கழகம், தமது நூற்றாண்டு விழாவையொட்டி நடாத்திய 'வடக்கின் கில்லாடி யார்’ கால்பபந்தாட்டத் தொடரில் குருநகர் பாடுமீன் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது.

அரியாலை கால்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில், இளவாலை யங்ஹென்றிஸ் விளையாட்டுக் கழகத்தை வென்றே பாடுமீன் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியிருந்தது.

இறுதிப் போட்டி தொடங்கிய முதலாவது நிமிடத்திலேயே பாடுமீன் அணிக்கு கோல் பெறும் வாய்ப்புக் கிடைத்தும் அதனை அவர்கள் சரியாகப் பயன்படுத்தவில்லை. 37ஆவது நிமிடத்தில் கிடைத்த பிறீ கிக் வாய்ப்பையும் பாடுமீன் அணி வீணாக்கியது. 40ஆவது நிமிடத்தில், ஹென்றிஸ் அணியினர் மிக இலகுவாக கிடைத்த கோல் பெறும் வாய்ப்பை சீரான முடித்தல் இல்லாமையால், கோலாக்கத் தவறினர். 45ஆவது நிமிடத்தில் பாடுமீன் அணியின் விசோத் அபாரமாக தலையால் மோதி கோலொன்றைப் பெற அக்கோலுடன் பாடுமீன் முன்னிலை பெற முதற்பாதி நிறைவுக்கு வந்தது.

இரண்டாம் பாதியில் ஹென்றிஸ் அணிக்கு, 51, 60ஆவது நிமிடங்களில் கிடைத்த பிறீ கிக் வாய்ப்ப்புகளை அவ்வணி வீணடித்தது. 62ஆவது நிமிடத்தில் கிடைத்த மிக இலகுவான கோல் பெறும் வாய்ப்பும் ஹென்றிஸ் அணிக்கு கைநழுவிப் போனது.

65ஆவது நிமிடத்தில் அவ்வணியின் ஞானரூபன் கோல் கம்பத்தை நோக்கி உதைந்த அருமையான உதையொன்று கோல் கம்பத்துக்கு மேலால் சென்றது. அடுத்த இரண்டு நிமிடங்களில் பாடுமீன் அணியின் சாந்தன் உதைந்த மிக நேர்த்தியான உதையையை, ஹென்றிஸ் கோல் காப்பாளர் அமல்ராஜ், அசாத்தியமாக பிடித்து கோலைத் தடுத்தார்.

எவ்வாறெனினும், 77 ஆவது நிமிடத்தில் சாந்தன் மிகவும் அபராமாக பாய்ந்து உதைந்து பெற்ற கோலோடு இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற பாடுமீன் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.

இந்நிலையில் இத்தொடரில், மக்கள் மனம் கவர்ந்த வீரனாக ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகத்தின் தர்மகுலநாதன் கஜகோபன் தெரிவாகியிருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .