2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சம்பியனாகியது யாழ். சென். பற்றிக்ஸ்

Editorial   / 2018 மார்ச் 13 , பி.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கே. கண்ணன் 

இளையோர் உள்ளக புட்சல் கால்பந்தாட்ட தேசிய மட்ட அழைக்கப்பட்ட பாடசாலைகளுக்கான, 14, 16 வயதுக்குட்பட்ட பிரிவுகளில், யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி சம்பியனாகியது.

குறித்த கால்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டிகள், கொழும்பு சர்வதேச ஒசர்ஏசியா உள்ளக விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றன. 

16 வயதுக்குட்பட்டோருக்கான இறுதிப் போட்டியில், சென். பற்றிக்ஸ் கல்லூரி அணியை எதிர்த்து இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி அணி மோதியது.

குறித்த போட்டியின் இடைவேளைக்கு முன்னரான ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய சென். பற்றிக்ஸ் கல்லூரி அணியின் வீரர் றஜிந்தன் இரண்டு கோல்களைப் பெற 2-0 என்ற கோல் கணக்கில் இடைவேளையின்போது சென். பற்றிக்ஸ் கல்லூரி முன்னிலை வகித்தது.

இடைவேளைக்கு பின்னரான ஆட்டத்திலும் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணியினரின் ஆட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் புனித ஹென்றியரசர் கல்லூரி அணியினர் திணறினர். இதனால், சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி வீரர்கள் லியோ, அபிஸ் ஆகியோர் அடுத்தடுத்து இரண்டு கோல்களைப் பெற்று அசத்தினார். இருப்பினும் தொடர்ந்து போராடிய புனித ஹென்றியரசர் கல்லூரி அணி ஒரு கோலைப் பெற போட்டி நேர முடிவில் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுச் சம்பியனாகியது. 

14 வயதுக்குட்பட்டோருக்கான இறுதிப் போட்டியில், சென் பற்றிக்ஸ் கல்லூரி அணியை எதிர்த்து கொழும்பு இன்டர்நஷனல் பிரிட்டிஷ் கல்லூரி அணி மோதியது.

குறித்த போட்டியின் இடைவேளைக்கு முன்னர் இரண்டு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்களல்ல என்பதை நிரூபிக்கும் முகமாக விளையாடிக் கொண்டிருந்தனர். இதனால் இடைவேளைக்கு முன்னரான ஆட்டத்தில் இரண்டு அணிகளாலும் கோலெதனையும் பெற முடியவில்லை.

இடைவேளைக்கு பின்னரும் இரண்டு அணிகளும் தொடர்ந்து பலப்பரீட்சை நடாத்தினர். இருப்பினும் போட்டி முடிவடைவதற்கு சில நிமிடங்கள் இருக்கும்போது சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி வீரர் றோவான்சன் மிகச் சிறப்பான கோலைப் பெற்று அசத்த போட்டி நேர முடிவில் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியனாகியது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .