2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சம்பியனாகியது யாழ். மத்திய கல்லூரி

குணசேகரன் சுரேன்   / 2018 ஜூன் 02 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வட மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியின் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான மேசைப்பந்தாட்டத் தொடரில் யாழ். மத்திய கல்லூரி சம்பியனாகியது.

வட மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் வட மாகாணப் பாடசாலைகளுக்கிடையில் வருடாந்த விளையாட்டுப் போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது. இதில், 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான மேசைப்பந்தாட்டத் தொடர் யாழ். மத்திய கல்லூரி மேசைப்பந்தாட்ட திடலில் நடைபெற்றது.

இறுதிப் போட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரியும் யாழ். மத்திய கல்லூரியும் மோதின.

முதலாவது ஒற்றையர் போட்டியில் யாழ். மத்திய கல்லூரியின் மேசக்கை எதிர்த்து கொக்குவில் இந்துக் கல்லூரியின் தனுஸ் மோதினார். இதில் மேசக் 11-06, 11-08, 11-09 என மூன்று செட்களையும் தனுஸ் 11-08, 11-09 என இரண்டு செட்களையும் கைப்பற்ற முடிவில் மேசக் 3-2 என்ற செட் கணக்கில் வென்றார்.

இரண்டாவது ஒற்றையர் போட்டியில், யாழ். மத்திய கல்லூரியின் தட்சயனனை எதிர்த்து கொக்குவில் இந்துவின் துஸியந்தன் மோதினார். துஸியந்தன் 12-10, 11-08, 11-09 என மூன்று செட்களையும், தட்சயனன் 11-02, 11-06 என இரண்டு செட்களையும் கைப்பற்ற முடிவில் துஸியந்தன் 3-2 என்ற செட் கணக்கில் வென்றார்.

மூன்றாவது ஒற்றையர் போட்டியில், கொக்குவில் இந்துவின் சாய்ராமை எதிர்த்து யாழ். மத்திய கல்லூரியின் லவிதன் மோதினார். இதில், லவிதன், 11-08, 11-05, 14-12 என்ற நேர் செட்களில் வென்றார்.

தொடர்ந்தும், வெற்றியாளர் தொடர்பில் இழுபறி தொடர்ந்ததால், நான்காவது ஒற்றையர் போட்டி நடைபெற்றது. இதில், யாழ். மத்திய கல்லூரியின் மேசக்கை எதிர்த்து கொக்குவில் இந்துக் கல்லூரியின் துஸியந்தன் மோதினார். இதில் மேசக் 11-08, 7-11, 11-09, 11-08 என்ற செட் கணக்கில் வென்றார்.

ஐந்தாவது ஒற்றையர் போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் தட்சயனனை எதிர்த்து கொக்குவில் இந்துவின் தனுஸ் மோதினார். இதில் தட்சயனன் 11-08, 11-07, 12-10 என மூன்று செட்களையும் தனுஸ் 11-03, 11-07 என இரண்டு செட்களையும் கைப்பற்ற, 3-2 என்ற செட் கணக்கில் தட்சயனன் வென்றார்.

அந்தவகையில், மூன்று ஒற்றையர் ஆட்டங்களை வென்ற யாழ். மத்திய கல்லூரி அணி சம்பியனானது. இறுதிப் போட்டியின் நாயகனாக எம். மேசக் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .