2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சம்பியனானது மன்னார்

குணசேகரன் சுரேன்   / 2018 மே 30 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மன்னார் அணியின் பியூல்ஸின் இறுதிநேர அசத்தலான ஆட்டத்தால், வட மாகாண கால்பந்தாட்டத்தில் மன்னார் மாவட்டம் சம்பியனானது.

வட மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில், வட மாகாண மாவட்டங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் இவற்றில் ஓரங்கமான கால்பந்தாட்ட இறுதிப் போட்டியானது பலத்த இழுபறிக்கு மத்தியில் கிளிநொச்சி உருத்திரபுரம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

மேற்படி இறுதிப் போட்டியானது யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் முன்னர் நடைபெறுவதாக இருந்து, குழப்பங்கள் காரணமாக பின்னர் வவுனியா நகர சபை மைதானத்தில் நடைபெறுவதாக இருந்து, அதுவும் மாற்றப்பட்டு பின்னர் ஒருவாறு கிளிநொச்சியில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இறுதிப் போட்டியில், மன்னார் மாவட்ட அணியும் யாழ். மாவட்ட அணியும் மோதின. முதற்பாதியில் மன்னார் அணி முதலாவது கோலைப் பெற்றது. இரண்டாம் பாதியில் யாழ். அணியின் ஞானரூபன் கோலொன்றைப் பெற்று கோல் எண்ணிக்கையை சமப்படுத்தினார்.

இதன் பின்னர் யாழ். அணியின் ஆட்டம் சிறப்பாக இருந்தும், அவர்களால் கோல் எதனையும் பெற முடியவில்லை. போட்டியின் இறுதி நிமிடங்களில் மன்னார் அணியின், பியூல்ஸ் அடுத்தடுத்து இரண்டு கோல்களைப் பெற்ற்ய் போட்டியின் போக்கை சடுதியாக மாற்றினார். முடிவில் மன்னார் மாவட்ட அணி, 3-1 என்ற கோல் கணக்கில் வென்று சம்பியனானது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .