2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சாந்தனின் ஹட்-ட்ரிக்குடன் சம்பியனானது பாடுமீன்

குணசேகரன் சுரேன்   / 2018 ஒக்டோபர் 31 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாண லீக் அணிகளுக்கிடையிலான கிறாஸ்கொப்பர்ஸ் அணியின் முன்னாள் கால்பந்தாட்ட பயிற்றுநர் ரி.பி.பத்மநாதன் ஞாபகார்த்தமான கால்பந்தாட்டத் தொடரில் குருநகர் பாடுமீன் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.

அரியாலை கால்ப்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் நடைபெற்று வந்த விலகல் முறையிலான குறித்த தொடரில் 16 அணிகள் பங்குபற்றியிருந்த நிலையில், யாழ். துரையப்பாட்ட விளையாட்டரங்கில் நேற்று இறுதிப் போட்டியில் ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகத்தை வென்றே பாடுமீன் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது.

இறுதிப் போட்டி தொடங்கியது முதல் றோயல் அணியின் ஆட்டத்தில் தொய்வு காணப்பட்டது. இதனைச் சாதமாகப் பயன்படுத்திய பாடுமீன் அணி, முன்னேறித் தாக்குதல் ஆட்டம் ஆடியது. முதற்பாதியில் பாடுமீன் அணி இரண்டு கோல்களைப் பெற்றது.

இரண்டாவது பாதியிலும் பாடும்மீன் அணியின் கையே மேலோங்கியிருந்தது. இதன் பயனாக அவ்வணி மூன்றாவது கோலையும் பெற்றது. அதுவரையில் சொதப்பல் ஆட்டம் ஆடிய றோயல் அணி, பதில் கோலொன்றைப் பெற்றது. எனினும் சளைக்காது விளையாடிய பாடுமீன் அணி, மேலுமொரு கோலைப் பெற்று வெற்றியை உறுதி செய்து போட்டி முடிவில் 4-1 என்ற கோல் கணக்கில் வென்று சம்பியனாகியது.

2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்தொடர் கடந்த இரண்டு ஆண்டுகளாக, வலிகாமம் லீக்கின் ஒழுங்கமைப்பில் நடத்தப்பட்டு வந்து, சில குழப்பங்களால் இம்முறை யாழ்ப்பாண லீக்கின் ஒழுங்கமைப்பில், ராஜகாந்தன், தர்மகுலசிங்கம், மோகன்ராம் ஆகியோரின் அனுசரணையில் நடைபெற்றிருந்தது.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .