2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வி.டி. மகாலிங்கம் தொடரின் இறுதிப் போட்டி

குணசேகரன் சுரேன்   / 2017 ஒக்டோபர் 21 , பி.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.டி. மகாலிங்கம் ஞாபகார்த்த பிறீமியர் லீக்கின் இறுதிப் போட்டி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நாளை பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அணியும் திருநெல்வேலி கிரிக்கெட் அணியும் மோதவுள்ளன.

யாழ். மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில், வி.டி.மகாலிங்கம் ஞாபகார்த்த பிறீமியர் லீக் இருபதுக்கு - 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியானது, இவ்வாண்டு ஓகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி முதல் நடைபெற்று வருகின்றது. இச்சுற்றுப் போட்டியில், யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 24 அணிகள் பங்குபற்றின.

சென்றலைட்ஸ், ஜொலிஸ்ரார்ஸ், ஸ்ரீகாமாட்சி, ஸ்ரான்லி, அரியாலை மற்றும் விக்டோரியன்ஸ், ஜொனியன்ஸ், கொக்குவில் மத்திய சனசமூக நிலையம், ஹாட்லியன்ஸ், ஸ்கந்தா ஸ்ரார், றெஜின்போ, கிறாஸ்கொப்பர்ஸ், ஓல்கோட், சென்ரல், திருநெல்வேலி வை.எம்.எச்.ஏ, யூனியன்ஸ், பற்றீசியன்ஸ், மானிப்பாய் பரிஸ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி கிரிக்கெட் கழகம், டிறிபேக், நியுஸ்ரார், விங்ஸ், ரைரேன் ஆகிய அணிகள் இச்சுற்றுப் போட்டியில் பங்குபற்றின.

அணிகள், நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 6 அணிகள் இடம்பெற்று அவற்றுக்கிடையில், லீக் முறையில் முதற்சுற்றுப் போட்டிகள் இடம்பெற்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களையும் பெற்ற அணிகள், காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. காலிறுதி மற்றும் அரையிறுதிப் போட்டிகள் விலகல் முறையில் நடைபெற்றன. மொத்தமாக 66 போட்டிகள் இதுவரையில் நடைபெற்று முடிந்து, இச்சுற்றுப் போட்டியானது தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.

அரையிறுதிப் போட்டிகளில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி, எட்டு ஓட்டங்களால் சென்றலைட்ஸ் அணியை வென்றது. அதேபோல், திருநெல்வேலி கிரிக்கெட் அணி, 21 ஓட்டங்களால் அரியாலை ஐக்கிய அணியை வென்றது.

 இறுதிப் போட்டிக்கு பிரதம அதிதியாக. யாழ். மாவட்டச் செயலர் நாகலிங்கம் வேதநாயகன், கௌரவ அதிதியாக, வட மாகாண கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் பி.றஜீவன், சிறப்பு அதிதிகளாக யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிபர் எஸ்.கே. எழில்வேந்தன், மல்லாகம் கிராமிய அபிவிருத்திச் சங்கத் தலைவர் பாலாம்பிகை சிறிபாஸ்கரன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

இறுதிப்போட்டிக்கு முன்னதாக காலையில் மூன்றாமிடத்துக்கான போட்டியில் இடம்பெறவுள்ளது. இதில், அரியாலை ஐக்கிய அணியும் சென்றலைட்ஸ் அணியும் மோதவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X