2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வென்றது வல்வை கால்பந்தாட்டக் கழகம்

குணசேகரன் சுரேன்   / 2018 ஜூன் 05 , பி.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வடக்கு, கிழக்கு மாகாண வீரர்களை ஒன்றிணைத்து நடத்தப்படும் வடக்கு கிழக்கு பிறிமியர் லீக்கில், யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் இன்றிரவு நடைபெற்ற லீக் சுற்றுப் போட்டியொன்றில், முல்லை பொனெக்ஸ் கால்பந்தாட்டக் கழகத்தை வல்வை கால்பந்தாட்டக் கழகம் வென்றது.

இப்போட்டியின் முதற்பாதியின் ஆரம்பத்தில் பொனெக்ஸ் அணியின் ஆட்டத்தில் வேகமும் ஆக்ரோஷமும் தென்பட்டது. அடிக்கடி எதிரணியின் கோல் கம்பங்களை ஆக்கிரமித்தபடி இருந்தனர். எனினும் கிடைத்த இரண்டு இலகுவான சந்தர்ப்பங்களில், ஒன்றை கோல் கம்பத்துக்கு சற்று வெளியிலும் மற்றையதை கோல் காப்பாளர் கைகளுக்குள்ளும் கொடுத்து வீணாக்கினர்.

அதுவரையில் நிதானம் காத்த வல்வை அணிக்கு முதலாவது கோலை நட்சத்திர வீரர் பிறேம்குமார் (பீமா) பெற்றுக் கொடுத்தார். வல்லை அணியின் இரண்டாவது கோலை மற்றுமொரு நட்சத்திரவீரர் செ. ஞானரூபன் பெற்றார். அதனுடன் ஆட்டம் கைமாற, வல்லை அணியின் மூன்றாவது கோலை மதுசன் பெற்றார். முதற்பாதி முடிவில் வல்லை அணி, 3-0 என்ற கோல் கணக்கி முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதி தொடங்கியதும் வல்லை அணிக்கு பெனால்டி வாய்ப்பொன்று கிடைத்தது. அதை ஞானரூபன் கோலாக மாற்றினார். தொடர்ந்து, போட்டியின் இறுதி நிமிடத்தில் பீமா மேலுமொரு கோலைப் பெற்று போட்டியை முழுமையாக தனதணியின் பக்கம் சாய்த்தார். முடிவில், வல்வை அணி, 5-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

இப்போட்டியின் நாயகனாக வல்லை அணியின் பிறேம்குமார் தெரிவானார்.

இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற போட்டியில் வவுனியா வொரியர்ஸ் அணியை எதிர்த்து மன்னார் கால்பந்தாட்டக் கழகம் மோதியது. போட்டியின் முதற்பாதியில் மன்னார் அணியின் செந்துஜன் முதலாவது கோலைப் பெற்றார். அக்கோலுடன் முதலாவது பாதி நிறைவுக்கு வந்தது. இரண்டாவது பாதியில் மேலதிக கோலெதுவும் பெறப்படாத நிலையில், இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் மன்னார் கால்பந்தாட்டக் கழகம் வென்றது. இப்போட்டியின் நாயகனாக செந்துஜன் தெரிவாகியிருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .