2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வலிகாமம் கால்பந்தாட்ட லீக் வெற்றி

Super User   / 2014 ஜூலை 02 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-    நா.நவரத்தினராசா


இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில், சம்மேளனத்தின் கீழுள்ள லீக்குகளின் 19 வயதுப் பிரிவினருக்கிடையில் இடம்பெற்றுவரும் கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் போட்டியொன்றில் வலிகாமம் கால்பந்தாட்ட லீக் அணி வெற்றிபெற்றது.

மேற்படி சுற்றுப்போட்டியின் ஆட்டமொன்று மானிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (01) இடம்பெற்றது, வலிகாமம் கால்பந்தாட்ட லீக் அணியினை எதிர்த்து வடமராட்சி கால்பந்தாட்ட லீக் அணி மோதியது.

போட்டியின் 18 ஆவது நிமிடத்தில் வலிகாமம் அணயின் என்.தனுஜன் முதலாவது கோலை தனது அணிக்காகப் பெற்றுக்கொடுத்தார். இருந்தும் அதற்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில் வடமராட்சி அணியின் கே.குரோலவன் ஒரு கோலை அடித்தார். முதல் பாதியாட்டம் 1:1 என்ற சமநிலையில் முடிவடைந்தது.

இரண்டாவது பாதியாட்டத்தில் வலிகாமம் அணி ஆதிக்கம் செலுத்த அவ்வணியின் எஸ்.ஜனார்த்தனன் அடுத்தடுத்து 2 கோல்களைப் போட்டார்.
மேலும், அவ்வணியின் என்.தனேஸ், கே.கிரிசாந் ஆகியோர் தலா ஒவ்வொரு கோல்களை அடுத்தடுத்து அடித்தனர்.

இறுதியில் வலிகாமம் அணி 5:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .