2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

SLFPA நடத்தும் மென்பந்து கிரிக்கெட் தொடர் விரைவில்

Editorial   / 2017 ஜூலை 21 , மு.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின், தயாரித்த உணவு உற்பத்தியாளர்கள் சங்கம் (SLFPA), அணிக்கு அறுவர் கொண்ட நான்காவது வருடாந்த மென்பந்து கிரிக்கெட் போட்டித் தொடர் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. இத்தொடர், ஜூலை 29 ஆம் திகதி, சனிக்கிழமை கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்தில் இடம்பெறவுள்ளது.

இந்தத் தொடரில் கலந்துகொள்வதற்காக, 27 அணிகள் தயார் நிலையில் காத்திருக்கின்றன.

இதில், SLFPA சவால் வெற்றிக் கேடயம், இறுதிப் பரிசாக வழங்கப்படும். 2016ஆம் ஆண்டு, சிலோன் கோல்ட் ஸ்டோர்ஸ், வெற்றிக் கேடயத்தை வென்றெடுத்திருந்தது. விஸ்வ மார்கட்டிங் மற்றும் MA’s ட்ரொபிக்கல் புஃட் புரொசஸிங் பிரைவெட் லிமிட்டெட் என்பன, முறையே 2015 மற்றும் 2014ஆம் ஆண்டுகளுக்கான கேடயங்களை வென்றெடுத்தன.

தயாரிக்கப்பட்ட உணவு, தயார்செய்யப்பட்ட மென்பானங்கள், இயந்திரங்கள் மற்றும் பொதி செய்தல், சர்வதேச உணவுச் சான்றிதழ்கள், உணவு உள்ளடக்கங்கள் மற்றும் சாதாரண உணவகங்கள் என்ற வகையில் பங்குபற்றும் நிறுவனங்களின் அணிகள் பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

இவ்வருட போட்டித் தொடரின் அனுசரணையாளர்களாக பொன்டேரா பிரான்ட் லங்கா லிமிட்டெட், வெஸ்ட்மான் ஈஎன்ஜீ கொம்பனி லிமிட்டெட், CMC எஞ்ஜினியரிங் எக்ஸ்போர்ட் லிமிட்டெட், CDDE பொன்சேகா அன்ட் சன்ஸ் லிமிட்டெட், கன்றி ஸ்டைல் புஃட்ஸ் லிமிட்டெட், மீடியா பிளேன், சம்பத் வங்கி பிஎல்சி, யூனியன் வங்கி பிஎல்சி, சிலோன் பிஸ்கட்ஸ் லிமிட்டெட், BASF, கொழும்பு டிரஸ்ட் பினான்ஸ், இலங்கை கண்காட்சி மற்றும் கருத்தரங்கு சேவைகள் நிறுவனம், பிரின்ட் கெயார் மற்றும் நியோ கெம் ஆகியன முன்வந்துள்ளன.

இலங்கை தயார்செய்யப்பட்ட உணவு உற்பத்தியாளர்களின் சங்கம், 1997ஆம் ஆண்டில் ஓர் ஆலோசனைக் குழுவாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது. தற்போது அதில் 130க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்கள் (SME), பெரிய அளவிலான நிறுவனங்கள் மற்றும் பல்தேசிய நிறுவனங்கள் ஆகியன அங்கத்துவத்தைக் கொண்டுள்ளன.

நாட்டின் தயார் செய்யப்பட்ட உணவு மற்றும் மென்பானத்துறையின் அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் இந்த அமைப்பில், அனைத்து உப பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்திய வகையில் அங்கத்தவர்கள் உள்ளனர். விவசாயப் பொருளாதாரம் ஒன்றைக் கொண்டுள்ள இந்நாட்டுக்குப் பெரும் உறுதுணையாக அமையும் இந்தத் துறை, 300,000க்கும் அதிகமானோருக்கு நேரடித் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதோடு, நான்கு மில்லியனுக்கும் அதிகமானோருக்கு நேரடியற்ற முறையில் தொழில் வாய்ப்புகளை வழங்கி வருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .