2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

5 முஸ்லிம் சர்வதேச பாடசாலைகள் மாத்திரமே தரம் வாய்ந்தவை-ஹஜர்ஜான் மன்சூர்

Super User   / 2010 ஓகஸ்ட் 21 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எச்.எம்.பௌஸான்)

இலங்கையில் உள்ள முஸ்லிம் சர்வதேச பாடசாலைகளில் 5 மாத்திரமே தகுதி வாய்ந்த சர்வதேச பாடசாலைகள் என சார்க் அமைப்பின் மனிதவள அபிவிருத்தி நிலையத்தின் பிரதி பணிப்பாளர் கலாநிதி ஹஜர்ஜான் மன்சூர் தெரிவித்தார்.

மல்வானை ஓ.எல்.எம்.மொஹைடீன் நிதியம் ஏற்பாடு செய்திருந்த 'பெண்களுக்கான கல்வியின் முக்கியத்துவம்" எனும் தொனிப் பொருளிலான  செயலமர்வில் உரையாற்றும் போதே அவர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உறையாற்றிய அவர், மற்றைய அனைத்தும் சர்வதேச பாடசாலைகளும் வேறு நோக்கங்களுக்காகவ்ம், தேவைகளுக்காகவுமே அமைக்கப்பட்டவை ஆகும்.

ஒவ்வொறு பிள்ளைகளினதும் ஆரம்பக்கல்வி தாய் மொழியில் தான் அமைய வேண்டும் அதுவே அந்த பிள்ளைகளின் ஆரோக்கியமான எதிர்கால கல்விக்கு வழியமைக்கும் என அவர் குறிப்பிட்டார்.

ஆனால், இன்று பெற்றோர்கள் ஆங்கிலம் கற்க வேண்டும் என்பதற்காக சர்வதேச பாடசாலைகளில் தங்கள் பிள்ளைகளை சேர்கின்றனர். இது ஒரு நல்ல முறையல்ல. முதலில் ஆரம்பக்கல்வியை தாய் மொழியில் கற்க விட்டு, பின்னர் உயர் கல்விக்காக ஆங்கில மொழியில் கற்க அனுப்ப வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் கல்வியில் அதிகம் முன்னேறி வருகின்றனர். இது வரவேற்கத் தக்கது எனவும் கலாநிதி ஹஜர்ஜான் மன்சூர் தெரிவித்தார்.

இந்நிதியத்தின் தலைவரும் மேல் நீதிமன்ற நீதிபதியுமான எம்.எம்.ஏ.கபூர் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் பெருந்திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .