2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வவுனியா வடக்கு பிரதேச செயலக கலாசார விழா

Suganthini Ratnam   / 2013 ஜூலை 28 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}



-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் கலாசார விழா கோலாகலமாக அந்தப் பிரதேச செயலக வளாகத்தில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

'இயல், இசை, நாடகத்தால் இன்பத்தமிழ் வளர்ப்போம்' என்னும்; தொனிப்பொருளில் இந்த கலாசார விழா நடைபெற்றது.  வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன் தலைமையில் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து இந்த கலாசார விழா நடத்தப்பட்டது.

இந்த விழாவில் தமிழ் வளர்த்த பெரியார்களின் திருவுருவப்படங்கள் தாங்கிய ஊர்தியுடன் தமிழர் பாரம்பரிய கலைகளான காவடி, கலப்பை பூட்டிய எருதுகளுடன்  பண்பாட்டு பேரணி நெடுங்கேணி மாகவித்தியாலயத்திலிருந்து ஆரம்பித்து பிரதேச செயலகத்தை வந்தடைந்தது.

இதனைத் தொடர்ந்து  வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், வவுனியா வடக்கு பிரதேச சபையின் உபதவிசாளர் ரி.தணிகாசலம், வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் சரஸ்வதி மோகநாதன், சேவா லங்காவின் நிகழ்சித்திட்ட பிரதிப் பணிப்பாளர் அனட்ரோய் பிரேமலதா, பொஸ்டோ நிறுவன நிகழ்சித்திட்ட முகாமையாளர் பி.செந்தில்குமரன், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் நிகழ்ச்சித்திட்ட அலுவலர் சா.சயந்தன் ஆகியோர்; அழைத்துவரப்பட்டு மங்கள விளக்கேற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இதனைத் தொடர்ந்து நெடுங்கேணி மகாவித்தியாலய மாணவிகள்;; தமிழ் தாய் வாழ்த்து இசைத்தனர்.  புளியங்குளத்தை சேர்ந்த நிருத்திய கலாசேஸ்திர நுண்காலைக்கல்லூரி மாணவிகள் வரவேற்பு நடனம் நிகழ்த்தினர். வவுனியா வடக்கு உதவி பிரதேச செயலாளர் வே.ஆயகுலன்; வரவேற்புரை ஆற்றினார்.

தலைமையுரையினை வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன் ஆற்றினார். 'காலம் தேறும் தமிழ்' எனும் இலக்கிய சொற்பொழிவினை இலக்கிய சுடர் ஐ.கதிர்காமசேகரம் ஆற்றினார்.  நெடுங்கேணி நாவலர் முன்பள்ளி மாணவர்கள்; இசைவும் அசைவும் நிகழ்வை நிகழ்த்தினர்.  கவிக்கதிர் தம்பித்துரை ஐங்கரனின் தலைமையில் கவிஞர் மாணிக்கம் ஜெகன், வன்னியூர் நிசான், நந்தா, மருதோடை நிலா ஆகியோரின் பங்கேற்புடன் நல்லதோர் வீணை செய்வோம் எனும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. கண்ணீந்த கண்ணப்பன் எனும் தலைப்பில் திருக்காலத்தி வில்லிசைக்குழுவினரின் வில்லிசை நடைபெற்றது. 'மருதமுகில்' நூல் வெளியீடும் நடைபெற்றது.

நூலின் வெளியீட்டுரையினை வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் விரிவுரையாளர் மி.சூசைதாசனும் ஏற்புரையினை மலராசிரியர் ஜெ.கோபிநாத்தும் ஆற்றினர். நெடுங்கேணி செம்மொழிக்கலாமன்றத்தை சேர்ந்த இராஜேந்திரம், தவபாலன் ஆகியோரின் மதுரக்குரலிசை நடைபெற்றது.  இலக்கியச்சுடர் ஐ.கதிர்காமசேகரம் தலைமையில்  இன்றைய உலகில் தமிழர் பாரம்பரியம் பெரிதும் பின்பற்றப்படுகின்றதா? பின்தள்ளப்படுகின்றதா? எனும் தலைப்பில் இன் தமிழ் இனியன் எஸ்.எஸ்.வாசன், இளங்கலைச்சுடர் ஜெ.கோபிநாத், க.தவபாலசிங்கம், ஜெ.திருவரங்கன், பா.ரஜீவன், த.தர்மேந்திரா ஆகியோரின் பங்கேற்புடன் பட்டிமன்றம் நடைபெற்றது.  நெடுங்கேணி மகாவித்தியாலய மாணவிகளின் செம்பு நடனம் நடைபெற்றது.  புளியங்குளத்தை சேர்ந்த நிருத்திய கலாசேஷ்திர நுண்காலைக்கல்லூரி மாணவிகளின் கீதாஞ்சலியும்  நெடுங்கேணி மகாவித்தியாலய மாணவிகளின் சுளகு நடனமும் கனகராஜன்குளம் மாவித்தியாலய மாணவர்களின் 'அர்ச்சந்திர மயான காண்டம்' இசை நாடகமும் மதியாமடு விவேகாநந்தா வித்தியாலய மாணவர்களின் சுமைதாங்கி எனும் சமூக நாடகமும் நெடுங்கேணி மகாவித்தியாலய மாணவிகளின் 'சத்தியவான் சாவித்திரி' இசை நாடகமும் சின்னடம்பன் பாரதி வித்தியாலய மாணவர்களின் 'காணல் நீர்' சமூக நாடகமும் நெடுங்கேணி மகாவித்தியாலய ஆசிரியர்கள் மற்றும்; மாணவர்கள் இணைந்து வழங்கும் 'ஸ்ரீவள்ளி' எனும் இசை நாடகமும் சின்னப்பூவரசன்குளம் விக்கினேஸ்வரா வித்தியாலய மாணவர்களின்  'காலங்கள் மாறினாலும்' எனும் தலைப்பில் சமூக நாடகமும் மாறாவிலுப்பை அ.த.க. பாடசாலையின் 'ஏழு பிள்ளை நல்ல தங்காள்' எனும் இசை நாடகமும் கலை வேந்தன் இசை நாடக வள்ளல் ம.தைரியநாதன் குழுவினரின் 'பூதத்தம்பி' இசை நாடகமும் கற்சிலை மடு பரந்தாமன் நாடக கலாமன்றத்தினரின் பண்டாரம் வன்னியனார் எனும் வரலாற்று நடகமும் இடம்பெற்றது.

இதேவேளை பல்துறையிலும் கலை வளர்ச்சிக்கு உழைத்த கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டனர்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .