2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பாரம்பரிய இசை, நடன நிகழ்வின் ஒத்திகை

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 17 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு பாரம்பரிய இசை, நடனங்களை தொகுத்து அழகியலாக்கி வெளியரங்கில் அழிக்கும் நிகழ்ச்சியின் ஒத்திகை மட்டக்களப்பு கேற்றில் இன்று வெள்ளிக்கிழமை (17) நடைபெற்றது.

தீபாவளி தினத்தன்று நடைபெறும் இந்நிகழ்வில் கிழக்கு மாகாணத்திலுள்ள கலை பண்பாடுகளை வெளிப்படுத்தும் நோக்கோடு ஆடல் பயிற்சியாக இவற்றை தொகுத்துள்ளதாக பேராசிரியர் எஸ்.மௌனகுரு தெரிவித்தார்.

கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிலைய மாணவர்களினால் அரங்கேற்றபடவுள்ள இந்நிகழ்ச்சியின் நெறியாழ்கையை இசைத்துறை விரிவுரையாளர் பிரியதர்சினி ஜயதீஸ்வரன் மேற்கொண்டுள்ளார்.

முன்பு கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் மேடைகளில் ஆற்றப்பட்ட இந்நிகழ்வை வெளியரங்கில் நடத்துவதற்கு எண்ணியுள்ளதாக பேராசிரியர் மேலும் தெரிவித்தார்.

மாவட்டச் செயலகத்தினால் நவம்பர் மாதம் 6ஆம் திகதி நடத்தப்படவுள்ள பௌர்ணமி கலை விழாவிலும் இந்நிகழ்ச்சி அரங்கேற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X