2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

'இல்லாமல் போன இன்பங்கள்' நூல் அறிமுக நிகழ்வு

Kogilavani   / 2014 ஒக்டோபர் 24 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல் 

மட்டக்களப்பு, கோவிலூர் செல்வராஜன் எழுதிய 'இல்லாமல் போன இன்பங்கள்' நூல் அறிமுக நிகழ்வு நாளை சனிக்கிழமை (25) காலை  மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபையின் அனுசரணையுடன், செங்கதிர் இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள தொல்லியல் ஆய்வாளரும் செங்கதிர் இலக்கிய வட்டத்தின் தலைவருமான க.தங்ககேஸ்வரியின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணப்பாளர் க.பாஸ்கரன், மட்டக்களப்பு தமிழ் சங்கத்தின் தலைவர் செ.எதிர்மன்னசிங்கம், கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் த.சிவசுப்பிரமணியம் உட்பட இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வில் வரவேற்புரையை தென்றல் சஞ்சிகையின் ஆசிரியர், க.கிருபாகரனும் அறிமுக உரையை செங்கதிர் சஞ்சிகையின் ஆசிரியர் செங்கதிரோன் த.கோபாலகிருஷ்ணனும், நூலின் நயவுரையை கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் ரூபி வெலன்ரீனா பிரான்ஸிஸூம் நிகழ்த்தவுள்ளனர்.

'இல்லாமல் போன இன்பங்கள்'  நூலின் சிறப்புப் பிரதிகளை, கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் தவிசாளர் பொன்.செல்வநாயம், சட்டத்தரணி கி.துரைராசசிங்கம், மட்டக்களப்பு மக்கள் வங்கி முகாமையாளர் ச.சரவணபவன், பாவலர் சாந்தி முகைத்தின், புதுவை மா.சதாசிவம், மட்டக்களப்பு சென் ஜோன்ஸ் அம்பியுலான்ஸின் தலைவர் ஏ.எஸ்.மீராசாகிபு ஆகியோரும் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .