2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அமெரிக்க விஞ்ஞானிகள் இருவருக்கு இரசாயனவியலுக்கான நோபல் பரிசு

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 10 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

2012ஆம் ஆண்டின் இரசாயனவியலுக்கான நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞானிகளான ரொபர்ட் லெப்கோவிஸ், ப்ரையன் கோபில்கா ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது.

செல்களில் உள்ள புரத மூலக்கூறுகள் குறித்த ஆய்வுக்காக இந்த பரிசு வழங்கப்படுகிறது என்று நோபல் பரிசுக் குழுவின் செயலாளர் ஸ்டெபார்ன் நோர்மன் தெரிவித்துள்ளார்.

இந்த பரிசு அறிவிப்பு தனக்கு ஆச்சரியத்தையும், உற்சாகத்தையும் அளிப்பதாக ரொபர்ட் லெப்கோவிஸ் தெரிவித்துள்ளார். 

இவர் வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள ஹோவார்டு ஹக்ஸ் மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் டியூக் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். கோபில்கா, ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகின்றார்.

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், மருத்துவம் மற்றும் பௌதிகவியலுக்கான நோபல் பரிசுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .