2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

எதிர்ப்பைப் பற்றி கவலையில்லை

George   / 2016 ஜூலை 11 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இசையமைப்பாளர் ஹிப் ஆப் தமிழா ஆதி, தற்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உருவாக்கிய „டக்கரு டக்கரு என்ற இசை அல்பம் வைரலாக இணையத்தளங்களில் பரவி வருகிறது.

இதற்கு விலங்கு நல அமைப்பான பீட்டா எதிர்ப்புத் தெரிவித்தபோதும் அல்பத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

'நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். எங்கள் வீட்டில் 30 மாடுகள் இருந்தன. மாட்டு தொழுவ வாசனையில் வளர்ந்தவன். எனக்கு விவசாயம் மீதும், மாடுகள் மீதும் தனி அன்பு உண்டு.  ஒரு முறை ஒரு டி.வி விவாதத்தில் கார்த்திகேய சேனாதிபதி, ஜல்லிக்கட்டு பற்றி பல  விடயங்கள் பேசினார்.

அது எந்த அளவுக்கு நம் மக்களோடு பின்னி பிணைந்தது. நம் கலாசாரத்தோடு தொடர்புடையது என்பதை அறிந்தேன். 

அதை பற்றி ஏன் ஒரு அல்பமாக பண்ணக்கூடாது என்று முடிவு செய்து மதுரை பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சென்று மாட்டுக்கும் மனிதருக்குமான தொடர்பு, பாசப்பிணைப்புகளை பார்த்து இந்த அல்பத்தை உருவாக்கினேன்.

சில அமைப்புகள் அல்பத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது தெரியும், நான் இதை ஒரு சினிமா இசையமைப்பாளனாக செய்யவில்லை. ஒரு தமிழனாக, ஒரு மனிதனாக விவசாயிகளுக்காக குரல் கொடுத்திருக்கேன். அதனால் எதிர்ப்புகளை பற்றி நான் கவலைப்படவில்லை' என்கிறார் ஆதி.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .