2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பின்வாங்கிய சண்டைக்கோழி

George   / 2017 மே 22 , பி.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், அறிவித்த வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இந்திய மத்திய, மாநில அரசாங்கங்களுக்கு ஒருசில கோரிக்கைகளை முன்வைத்த விஷால், இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால்  இம்மாதம் 30ஆம் திகதி முதல், ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமும் இணைந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் என்று அறிவித்திருந்தார்.

ஆனால், விஷாலின் இந்த வேலைநிறுத்த அறிவிப்புக்கு முதலிலேயே எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கத்தினர், எப்போதும் போல் 30ஆம் திகதி முதல் திரையரங்குகள் இயங்கும் என்று அறிவித்தனர்.

இந்த அறிவிப்பு விஷாலுக்கு ஒரு பின்னடைவாக கருதப்பட்ட நிலையில், தமிழ்த் திரைப்பட வர்த்தக சபையும் இந்த வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ள போவதில்லை என்று முடிவெடுத்தனர்.

மேலும், “ஜூலை 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் ஜி.எஸ்.டி வரி 28%, திரையுலகுக்கு பொருந்தும்” என்று, மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி விடுத்த அறிவிப்பு காரணமாக, ஜூன் 30ஆம் திகதிக்குள் தற்போது திரையிடத் தயாராக உள்ள திரைப்படங்களை வெளியிட அனைத்து தயாரிப்பாளர்களும் திட்டமிட்டுள்ளனர்.

எனவே இந்த நேரத்தில் வேலைநிறுத்தம் தேவையில்லை என்றே பலர் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதனையடுத்து,  30ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படவிருந்த வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகர் சங்க பொதுச்செயலாளரும், நடிகருமான விஷால் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .