2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பூங்காற்று திரும்புமா.... வைரமுத்து பிறந்தநாள் ஸ்பெஷல்

George   / 2016 ஜூலை 13 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் சினிமாவில் நிறைய பாடலாசிரியர்கள் இருந்தாலும் கண்ணதாசன், வாலி ஆகியோருக்கு பிறகு அனைவராலும் கவரப்பட்டவர் வைரமுத்து. 

தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற பாடலாசிரியராகவும், கவிஞராகவும் திகழும் வைரமுத்துவுக்கு இன்று (ஜூலை 13ஆம் திகதி) 63ஆவது பிறந்தநாள். 

வைரமுத்துவின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் கவிஞர்கள் திருநாள் விழாவாக கொண்டாடி வருகின்றனர். இந்தாண்டு மதுரையில் கவிஞர்கள் திருவிழா நடைபெற இருக்கிறது. வைரமுத்துவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரைப்பற்றிய சிறப்பு தொகுப்பு.

தேனி மாவட்டம் வடுகப்பட்டியில் ராமசாமி தேவருக்கும், அங்கம்மாளுக்கும் மகனாக ஜூலை 13 ஆம் திகதி, 1953 ஆம் ஆண்டு பிறந்தார். இளமை காலத்தில் அண்ணா, பெரியார், கருணாநிதி ஆகியோரின் தமிழால் கவரப்பட்டு, பாரதியார், பாரதிதாசன் மற்றும் கண்ணதாசன் அவர்களின் கவிதை நடையால் பெரிதும் ஈர்க்கப்பட்டதால் தனது 12ஆவது வயதிலேயே கவிதை எழுத ஆரம்பித்தார்.

தொடர்ந்து 14ஆவது வயதிலேயே, தமிழ் செய்யுளின் யாப்பின் சொல் இலக்கண விதிகளைக் கொண்டு கவிதைகள் எழுதத் தொடங்கினார். அதன்பின் பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் கவிதை எழுத ஆரம்பித்தார்.

இயக்குநர் பாரதிராஜாவால் 1978ஆம் ஆண்டு, நிழல்கள் திரைப்படத்தில் ‛இது ஒரு பொன் மாலைப் பொழுது... என்ற பாடலின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார். அப்போது தொடங்கிய வைரமுத்துவின் திரையுலக பயணம் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இப்போதும் தொடர்கிறது. 

சுமார் 6000 பாடல்கள் எழுதியிருக்கும் வைரமுத்து ஆறு முறை தேசிய விருதும், கலைமாமணி விருதும், பத்மஸ்ரீ விருதும், பத்மபூஷண் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.

பாடல்களோடு நிறுத்திக்கொள்ளாமல், பல்வேறு நாவல்கள், கவிதைத் தொகுப்புகள், நூல்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார். அவரது படைப்புகளில், வில்லோடு வா நிலவே, தண்ணீர் தேசம், வானம் தொட்டுவிடும், தூரம்தான், கருவாச்சி காவியம், கள்ளிக்காட்டு இதிகாசம், மற்றும் மூன்றாம் உலகப் போர் ஆகியவை குறிப்பிடத்தக்க படைப்புகளாகும்.

வைரமுத்து எழுதிய பாடல்கள் ஏராளம், அதில் சில...

இது ஒரு பொன் மாலைப் பொழுது.... : நிழல்கள்
நீ தானே எந்தன் பொன் வசந்தம்... : நினைவெல்லாம் நித்யா
என்ன சத்தம் இந்த நேரம்.... புன்னகை மன்னன்
கண்ணுக்குள் நூறு நிலவு... : வேதம் புதிது
என் தாயின் மீது ஆணை.... : மிஸ்டர் பாரத்
பூங்காற்று திரும்புமா.... : முதல் மரியாதை
தென்கிழக்கு சீமையில... கிழக்கு சீமையிலே
அச்சம் இல்லை இனி... : இந்திரா
பச்சை கிளிகள்... : இந்தியன்
மார்கழி பூவே.... : மே மாதம்
உன்னை பார்த்த பின்பு... : காதல் மன்னன்
சின்ன சின்ன ஆசை... : ரோஜா
போறாளே பொன்னுத்தாயி... : கருத்தம்மா
அன்பே அன்பே கொல்லாதே... : ஜீன்ஸ்
கை தட்டி தட்டி அழைத்தாளே... : ஜோடி
அவள் வருவாளா... : நேருக்கு நேர்
ஐ லவ் யூ லவ் யூ சொன்னாளே... : உள்ளத்தை அள்ளித்தா
முதல் முறை கிள்ளி பார்த்தேன்... : சங்கமம்
சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹால்... : தாஜ்மஹால்
அன்பென்ற மழையிலே.... : மின்சார கனவு
அஞ்சலி அஞ்சலி... : டூயட்
சந்திரனை தொட்டது யாரு... : ரட்சகன்
அழகான ராட்சஸியே... : முதல்வன்
ஒரு தெய்வம் தந்த பூவே... கன்னத்தில் முத்தமிட்டால்
எங்கே எனது கவிதை... : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
யார் யார் சிவம்... : அன்பே சிவம்
கள்ளிக்காட்டில் பிறந்த தாயே... : தென்மேற்கு பருவக்காற்று
இரும்பிலே ஓர் இருதயம்... : எந்திரன்

கவிபேரரசு வைரமுத்துவின் படைப்புகள் தொடர தமிழ்மிரரின் இதயம்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .