2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மதம் மாறினார் கண்ணதாசன் மகள் விசாலி

A.P.Mathan   / 2010 ஜூலை 11 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கவியரசு கண்ணதாசன் போன்றே அவரது மகளான விசாலி கண்ணதாசன் கவிதைகள் எழுதுவதிலும் சிறந்த மேடைப் பேச்சாளராகவும் மக்கள் மத்தியில் பிரபல்யம் பெற்றுத் திகழ்ந்தார். சில திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். அதேபோல் வானொலி நிகழ்ச்சிகள் சிலவற்றையும் தொகுத்து வழங்கியிருக்கிறார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியாவின் மயிலாப்பூரிலுள்ள நல்லாயர் ஆலயத்தில் வைத்து கிறிஸ்தவ மதத்தினைத் தழுவியிருக்கிறார் விசாலி கண்ணதாசன். அதுமட்டுமல்லாமல் தனது பெயரினையும் ஜெனிபர் என மாற்றிக் கொண்டுள்ளார்.

கவியரசு கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ அனைவரது மனதிலும் இடம்பிடித்த ஒரு காவியம் என்பதும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • xlntgson Sunday, 11 July 2010 08:12 PM

    இந்து மதத்தின் மீது தீவிர பற்றுக் கொண்டிருந்தவரது மகள், இவ்வாறு மதம் மாறியதன் காரணம் திருமண பந்தமா அல்லது கொள்கை காரணமா என்று தெரியவில்லை, நல்லவேளை அவர் வேறு நாட்டில் பிறந்திருக்கவில்லை, தலை போயிருக்கும்!

    Reply : 0       0

    likewell Monday, 12 July 2010 12:41 AM

    ஒரு கடவுள் கொள்கைக்கு வந்து விட்டார் . கண்மூடி இருப்பவர்கள் இனி கண் திறப்பார்களா ?

    Reply : 0       0

    sheen Monday, 12 July 2010 08:48 PM

    இநநூற்றாண்டில் கிறிஸ்தவ மதம் ஆசியாவில் பரப்பப்படும் என்று போப் இந்திய வருகையின் போது கூறியிருந்தார். இந்து மகாசபை போன்ற இயக்கங்கள் கடுமையாக ஆட்சேபித்திருந்தன- இவர் கத்தோலிகர் ஆனாரா?-மத மாற்றத்தின் மூலம் புரட்சிஎதையும் செய்ய முடியாது.கண்ணதாசன் இவருடைய வயதில் நாத்திகராக இருந்தார். முதிர்ந்த வயதில் ஆத்மீகத்துக்கு திரும்பினார். இவரும் இவ்வாறோ தெரியாது 'வந்ததை வரவில் வைப்போம் சென்றதை செலவில் வைப்போம்'. எல்லா மதங்களும் அன்பையே கூறுகின்றன ஆனால் இறுதியில் கொலைகளில் முடிகிறது!

    Reply : 0       0

    srikant Tuesday, 13 July 2010 09:11 PM

    தனது மதத்தவர் செய்யும் தவறுகளை நியாயப்படுத்தி மற்றவரது தவறுகளை பெரிது படுத்துவதனால், எண்ணிக்கை அடிப்படையில் தாங்கள் கூடிய எண்ணிக்கையில் இருக்கிறோம் என்பதனால் பிரச்சினை வளருமே தவிர குறையாது. உண்மை ஆட்சி செய்ய வேண்டுமானால் யாராக இருந்தாலும் நீதி நெறி அறம் உயரிய விழுமியங்கள் பேணி பாதுகாக்கப்படல் வேண்டும்.

    Reply : 0       0

    PETER FRANKLIN Wednesday, 01 September 2010 01:16 AM

    வாழ்த்துகள்,
    இவங்க உண்மையான தெய்வத்தை அறிஞ்சிட்டங்க. நீங்க எப்பம்?

    Reply : 0       0

    ansar Wednesday, 20 February 2013 01:59 AM

    பீட்டர் ஃப்ரங்லின் உண்மையான உண்மையை நீங்களும் புரிஞ்சுக்கலையே ராஜா..!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .