2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நடிகர் விஜய்க்கு ஆப்பு…

A.P.Mathan   / 2010 ஜூலை 14 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்களின் அவசர கூட்டத்தில் விஜயின் படங்களுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கமுடியாது என அறிவித்திருக்கிறார்கள்.

குருவி, வில்லு, அழகிய தமிழ் மகன், வேட்டைக்காரன், சுறா போன்ற படங்களின் மூலம் திரையரங்க உரிமையாளருக்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டிருப்பதால் அதற்கு நஷ்டஈடு வழங்க வேண்டுமென நடிகர் விஜயிடம் அவர்கள் கோரியிருந்தனர். ஆனால், அந்த நஷ்டஈட்டினை விஜய் வழங்கவில்லை. இதனால் கொதித்துப்போன திரையரங்க உரிமையாளர்கள் ஒன்றுசேர்ந்து விஜயின் படங்களுக்கு ஆதரவு வழங்கப்போவதில்லை என அறிவித்திருக்கிறார்கள்.

தொடர் தோல்விகளால் துவண்டுபோயிருக்கும் விஜய்க்கு இந்த அறிவிப்பு மேலும் தலைவலியைக் கொடுத்திருக்கிறது.

You May Also Like

  Comments - 0

  • jameel Thursday, 15 July 2010 01:46 AM

    தோல்வி வெற்றிக்கு வழி
    கவலையை விடு
    காரியத்தை செய்

    Reply : 0       0

    Fawsan Naieem Thursday, 15 July 2010 11:52 PM

    இவரது குருவி படம் 100வது நாள் வெற்றிவிழா சன் டிவியில் பார்த்த ஞாபகம் எனக்கு. ஏன் இப்படி ஒரு நாடகம். யாரை ஏமாற்றுகிறார்கள.

    Reply : 0       0

    Thamilan Friday, 16 July 2010 01:24 AM

    இது சரியல்ல, திரையரங்கு உரிமையாளர்கள் படத்தைப் பார்த்துவிட்டு தான் அதனை வாங்குகின்றார்கள் என்று நினைக்கிறேன். எது எப்படியாயினும், திரையரங்கும் ஒரு வியாபார ஸ்தாபனம். படத்தை வாங்குகின்றார்கள் (wholesale), பின்னர் அதை ரசிகர்களுக்கு விற்கின்றார்கள் (Retailing ). விஜய் படங்கள் "பிட்ச்சிகிட்டு" ஓடும்போது அதிகப்படியான இலாபத்தை ஈட்டிய அவர்கள் அதில் 40 %ஐ விஜய்க்கு கொடுத்தார்களா? என்ன நியாயம் இது?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .