2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

'துப்பாக்கி' சர்ச்சை: விஜய்க்கு பொலிஸ் பாதுகாப்பு

Menaka Mookandi   / 2012 நவம்பர் 14 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


நடிகர் விஜயின் நடிப்பில் தீபாவளியன்று வெளியிடப்பட்ட 'துப்பாக்கி' திரைப்படத்தில் முஸ்லிம்களை விமர்சித்திருப்பதாக சர்ச்சை வெடித்துள்ளது. இதையடுத்து நடிகர் விஜய்யின் வீட்டுக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விஜய் நடித்துள்ள துப்பாக்கி திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வந்தது. தமிழகத்தில் மாத்திரமன்றி இலங்கையிலும் பல திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படம் நன்றாக இருப்பதாக வமர்சனங்கள் வர ஆரம்பித்துள்ள நிலையில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

மும்பை தீவிரவாத சதி சம்பவப் பின்னணியில் இத்திரைப்படத்தின் கதை அமைந்துள்ளது. இந்த நிலையில் முஸ்லிம்களை விமர்சிப்பது போல இத்திரைப்படம் உள்ளதாக இந்திய தேசிய லீக் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் அக்கட்சி கூறியுள்ளது. மேலும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் இணைந்து விஜய் வீட்டு முன்பு போராட்டம் நடத்தலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து விஜய் தனது மனைவி குழந்தைகளுடன் வசித்து வரும் நீலாங்கரை வீட்டுக்கும், அவரது பெற்றோர் வசித்து வரும் வீட்டிற்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



You May Also Like

  Comments - 0

  • niron Wednesday, 14 November 2012 04:14 PM

    சம்பவம் உண்மை என்றால் விமர்சிப்பதில் தவறு இல்லை

    Reply : 0       0

    rima Wednesday, 14 November 2012 04:15 PM

    விஜய்யிக்கு இனி ஆப்புதான்... இவர் ஓவர் ஆகிவிட்டார். இவருக்கு இருந்த செல்வாக்கு அழிந்து போய்விட்டது...

    Reply : 0       0

    jahith Wednesday, 14 November 2012 05:02 PM

    dont feel thalapathi... cool

    Reply : 0       0

    Abdul Thursday, 15 November 2012 01:57 AM

    கேவலம் அற்ப விளம்பரத்துக்காக தன் ரசிகர்களின் மதத்தையும் மனதையும் புண்பாடுத்திவிட்டார். இதற்காக அவர் பகிரங்க‌ மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும். இதற்கு பின்னர் நான் ஒரு விஜய் ரசிகன் என்று எந்த முஸ்லிமாவது சொன்னால் அது முட்டாள்தனத்தின் உச்ச கட்டமாகும்...

    Reply : 0       0

    Powsan - Makkun Thursday, 15 November 2012 07:48 AM

    விஜய் படம் நடித்தால் அவருக்கே அதன் கதை என்னவென்று தெரியாது, இந்நிலையில் அவரை யாரும் குறை சொல்லக்கூடாது, முருகதாஸ் தான் இதிலே குற்றம் இழைத்தவர் என கருதுகிறேன்.

    Reply : 0       0

    Najah Thursday, 15 November 2012 09:08 AM

    விஜய் ஒரு நடிகர் மட்டுமே தவிர, கதை மற்றும் திரைக்கதை எழுதுபவர் அல்ல. இக்கருத்துக்களை கதையாசிரியரிடம் சொல்லுங்கள்

    Reply : 0       0

    Imran Thursday, 15 November 2012 09:22 AM

    பல பெண்களை கட்டிப்பிடித்து அதன் மூலமாக வாங்கிய பணத்தில் வயிற்றை நிறைக்கக்கூடியவர்களே? இஸ்லாமியர்களை பற்றி பேசுவதற்காவது தகுதியுள்ளதா?

    மூளை மழுங்கியவர்களையும், ஒன்றும் அறியாத ஏழை ரசிகர்களின் தயவில் வாழக் கூடிய நீங்கள், இந்த நாட்டிற்காகவும் நாட்டு மக்களுக்காகவும் செய்தது என்ன?

    பல சமூகத்தவர்களும் ஒற்றுமையாக இருக்கக் கூடிய இடங்களில் இது போன்ற திரைப்படங்கள் மூலமாக மக்களின் மனதில் நஞ்சை விதைத்து சிந்தனையை காட்டுகின்றாயா? நண்பனாக ஒரு குல்லாவும், தாடியும் வைத்து ஒருவனை நடிக்க வைப்பது. உங்களது நடுநிலை புல்லறிக்க வைக்கின்றது.

    ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்தும் இது போன்று திரைப்படங்களில் நடித்து அரசியலில் களம் இறங்க அடித்தளமிட்டால் இது அறியாமையையும், அடி முட்டாள்தனத்தைத் தான் காட்டுகின்றது. என்பதில் சிறிதும் மாற்றுக்கருத்து இருக்காது.

    Reply : 0       0

    thamilan Thursday, 15 November 2012 11:00 AM

    முஸ்லிம்கலுக்கு எப்போதும் நரி வேலை தான்.விஜய் வாழ்க‌

    Reply : 0       0

    Powsan - Makkun Thursday, 15 November 2012 11:38 AM

    இதில் என்ன கொடுமை என்றால் படம் பார்த்த நண்பர்களுக்கே தெரியவில்லை இதில் என்ன தவறு இருக்கின்றதென்று, இவர்கள் எல்லாம் படம் பார்க்கவில்லை என்று யார் அழுதார்கள். படத்தால் காசு கொட்டினாலும் ரசிகர்கள் மனதில் என்றுமே நிலைக்கப்போவது இந்த சர்ச்சைதான்

    Reply : 0       0

    ahmad Thursday, 15 November 2012 02:51 PM

    well said imran

    Reply : 0       0

    Imran Thursday, 15 November 2012 04:10 PM

    மணிரத்னம் ரோஜா எடுத்தபோது குமுறினோம். அவரே பம்பாய் எடுத்தபோது கொந்தளித்தோம்,விஜயகாந்த் படங்கள் விஷத்தைக் கக்கியபோது விமர்சித்தோம், அர்ஜூன் படங்கள் அவதூறு பரப்பியபோது ஆத்திரப்பட்டோம், உன்னைப்போல் ஒருவனில் கமல் கொச்சைப் படுத்தியபோது கண்டித்தோம்,இப்போது துப்பாக்கி நமக்கு எதிராக வெடித்த உடன் வீதிக்கே வந்து விட்டோம்.

    ரோஜா வந்த ஆண்டு 1992, துப்பாக்கி வந்திருக்கும் ஆண்டு 2012
    ஆக, நாம் களத்திற்கு வருவதற்கு 20 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. தமிழ் சினிமாவில் முஸ்லிம்களை இழிவு படுத்துவதென்பது புதிய விசயமல்ல. பலர் திட்டமிட்டு இழிவு படுத்துகிறார்கள்; திட்டமிட்டு இயங்குபவர்களை வீதியில்தான் சந்தித்தாக வேண்டும். அறியாமல் செய்பவர்களை சந்தித்து உரையாட வேண்டும்.

    எப்படியாயினும் படம் எடுக்கும் இடத்திலும், நாம் அதை பார்க்கும் இடத்திலும் தீர்வு பிறக்காது. சினிமா என்பது ஊடகம், ஊடகம் என்பது ஆயுதம்,அந்த ஆயுதம் நம் எதிரிகளின் கைகளில் இருக்கும்வரை நாம் தாக்கப்பட்டுக் கொண்டே இருப்போம்! வாள் கை மாறும் போதுதான் வாழ்க்கை மாறும் என்பதை நாம் எப்போது உணரப்போகிறோம்?

    Reply : 0       0

    nallavan Thursday, 15 November 2012 06:26 PM

    உமக்கு தலையில என்ன களி மண்னா இருக்கு..............

    Reply : 0       0

    எச்சரிக்கை Friday, 16 November 2012 01:45 PM

    இது போன்ற காட்சிகள் பல படங்களில் வந்து விட்டன. முஸ்லிமாக நடிப்பதும் புனித குர் ஆன் வசனங்களை பிளையாக ஓதி கேவளப்படுத்தி நடிப்பதும் எத்தனையோ படங்களில் நாம் கண்டு கொண்டு இருக்கின்றோம்.

    காஞ்சனா என்ற திரைப்படத்தை எடுத்துக்கொண்டால் அதில் கூட பேயை விரட்ட மஸ்ஜிதுக்குள் செல்வது போன்றும் அங்குள்ள ஒருத்தன் தொப்பி அணிந்து கொண்டும் முஸ்லிம் மனிதனைப் போன்று மிகவும் கேவலமான முறையில் குர் ஆன் வசனங்களை ஓதி சைத்தானை விரட்டுவதாகவும் காட்சிகள் படமாக்கப்பட்டன.

    அப்போது நீங்கள் எல்லாம் எங்கே போனீர்கள்? அதை எல்லாம் நம் இஸ்லாம் மதத்துக்கு இழிவு இல்லையா? இதற்கு விஜய்மட்டும் என்ன விதி விளக்கா?

    இனிமேலும் இது போன்ற எந்த காட்சிகளும் தமிழ் திரைப்படங்களில் இடம்பெறக்கூடாது. அப்படி மீறி இடம்பெற்றால் அது பெரிய பூகம்பமாக வெடிக்கும் தமிழ் திரை உலகத்திற்கே...

    Reply : 0       0

    குமார் Tuesday, 20 November 2012 02:31 PM

    இப்பொழுது புதிதாக பூகம்பம் வெடிப்பதற்கு என்ன இருக்கிறது? எல்லா முஸ்லிம்களும் தமிழ் ஆங்கில படங்களை பார்ப்பதை நிறுத்த வேண்டும். எராளமான ஈரானிய படங்களும் அரபு பாடல்களும் இருக்கின்றன.

    Reply : 0       0

    fahath Monday, 07 January 2013 12:05 PM

    விஜை ஒரு முச்லிமஹ நடிக்க முன்வந்துஇருப்பதுபரட்டதக்கது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X