2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’ஃபாம் ஒயில் இறக்குமதிக்கே தடை’

Nirosh   / 2021 ஏப்ரல் 08 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

அரசாங்கத்தால் இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள ஃபாம் ஒயிலை, இனிப்புப் பண்டங்கள் மற்றும் பேக்கரி உணவுப் பொருள் உற்பத்தியாளர்கள் இறக்குமதி செய்துகொள்ள, விசேட அனுமதிப் பத்திரமொன்றை வழங்கும் முறைமையொன்று அறிமுகப்படுத்தப்படும் என, வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 

அந்த வகையில், நிதி அமைச்சின் செயலாளரிடம் மேன்முறையீடொன்றை வழங்கி, தேவைக்கேற்றளவில் மாத்திரம் ஃபாம் ஒயிலைப் பெற்றுக்கொள்ள முடியுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். 

தேசிய தெங்கு மற்றும் தேங்காய் எண்ணெய் உற்பத்தியை மேம்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் ஃபாம் ஒயிலுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் பணத்தின் அளவைக் குறைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அமைச்சர் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, நாடாளுமன்றத்தில் நேற்று (07) உரையாற்றிய அமைச்சர், உள்நாட்டில் உரிய தர நிர்ணயங்களுக்கு ஏற்ப உற்பத்தி செய்யப்படும் ஃபாம் ஒயிலுக்கு தடை விதிக்கப்படவில்லை எனத் தெரிவித்ததோடு, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் ஃபாம் ஒயிலுக்கே தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார். 

பாம் ஒயில் இறக்குமதிக்கு தடை விதிப்பதால் பேக்கரி உணவு உற்பத்திகள் வீழ்ச்சியடையுமென கூறப்படுவதில் எந்தவிதமான உண்மையும் இல்லை எனவும், தேசிய எண்ணெய், தெங்கு உற்பத்தியை கட்டியெழுப்புவதற்கே ஃபாம் ஒயில் இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .