2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

அடையாளம் காணப்படாத 300 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டன

Editorial   / 2018 செப்டெம்பர் 09 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 5 வருடக்காலப் பகுதியில் அடையாளங்காணப்படாத 300 சடலங்கள் கொழும்பு பொது மயான பூமியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக, தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வருடத்தில் ஜனவரி முதல் ஓகஸ்ட் மாதம் வரையில், அடையாளங்காணப்படாத 67 சடலங்கள்  காணப்பட்டதாகவும்,  அதில் 32 சடலங்கள் ​பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டதாகவும், மிகுதி 35 சடலங்கள் கொழும்பு மாநகர சபையால் தெரிவு செய்யப்பட்ட ஒப்பந்தக்காரர்கள் மூலம் அடக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் கடந்த வருடம் 117 சடலங்களில் 65 சடலங்கள் அடையாளங்காணப்படாத நிலையில் அடக்கம் செய்யப்பட்டதுடன், கடந்த 5 வருட கால கணக்கெடுப்பின் படி, இதுவரையில் 300 அடையாளம் காணப்படாத 300 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக சட்ட மருத்துவ செயலகத்தினால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X