2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அதிகாரிகளை திருப்பி அழைத்த விவகாரம்; மைத்திரி விளக்கம்

Editorial   / 2018 செப்டெம்பர் 18 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒஸ்ரியாவுக்கான இலங்கை தூதுவர் மற்றும் அதிகாரிகளை திருப்பி அழைக்க உத்தரவிட்டமை தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விளக்கமளித்துள்ளார்.

ஆறு தொலைபேசி இணைப்புகளுக்கும் ஏற்படுத்தப்பட்ட அழைப்புகளில் ஒன்றுக்கு கூட அவர்கள் பதிலளிக்கவில்லை என்பதாலேயே
அவ​ர்களை நாட்டுக்கு திருப்பியழைக்க உத்தரவிட்டதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கும்போதே, ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

“வியன்னாவில் இருந்த எமது தூதுவருடன் உத்தியோகப்பூர்வ விடயம் தொடர்பாக, பேச வேண்டியிருந்தது. எனது தொடர்பாடல் குழு, அவருடன் தொடர்பை ஏற்படுத்த நான்கரை மணி நேரம் முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.

எனினும் தூதரகத்தில் இருந்த ஆறு தொலைபேசிகளுக்கு அழைப்பை ஏற்படுத்திய போதும், பதில் இல்லை. இந்த தூதரகமே, வேறு நான்கு ஐந்து நாடுகளுக்குமான பொறுப்பையும் கவனிக்கிறது.” என்றார்.

இதேவேளை திருப்பி அழைக்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் எதிர்வரும் நாட்களில் இலங்கையை வந்தடைவார்கள் எனவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X