2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அத்தியாவசிய பொருட்களின் அதிகூடிய சில்லறை விலை நிர்ணயம்

George   / 2015 நவம்பர் 18 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

அத்தியாவசிய பொருட்களின் அதிகூடிய சில்லறை விலையை நிர்ணயித்து நுகர்வோர் அதிகாரசபை வெளியிட்டுள்ளது. 

அதன்படி 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அந்த சபை இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, மைசூர் பருப்பு ஒரு கிலோகிராம் 190 ரூபாய்க்கும் உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம்  145 ரூபாய்க்கும் பெரிய மற்றும் சிறிய வெங்காயம் ஒரு கிலோகிராம் 155 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தோல் உரிக்கப்பட்ட முழுக் கோழி ஒரு கிலோகிராம் 480 ரூபாய்க்கும் பக்கற்றில் அடைத்த கோதுமை மா ஒரு கிலோகிராம் 95 ரூபாய்க்கும் உலர் மிளகாய் ஒரு கிலோகிராம் 355 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட வேண்டும் என்று அந்த அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அந்த அதிகூடிய சில்லறை விலை இன்று புதன்கிழமை(18) அறிவிக்கப்பட்டுள்ளதுடன்  20ஆம் திகதிமுதல் நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .