2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அதிவேக நெடுஞ்சாலைகள் வருமானம் ஈட்டின

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 12 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிவேக நெடுஞ்சாலையிலான வாகனப் போக்குவரத்து கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக, அதிவேக நெடுஞ்சாலையின் பராமரிப்பு மற்றும் செயற்பாடுகள் தொடர்பான பணிப்பாளர் எஸ்.ஒபநாயக்க தெரிவித்தார்.

இதற்கமைய தென் அதிவேக நெடுஞ்சாலையின் அதிகபட்ச வருமானமாக 17.5 மில்லியன் ரூபாய் கடந்த சனிக்கிழமை பதிவாகியுள்ளதாக, அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த ஐந்து வருடங்களுடன் ஒப்பிடுகையில், நான்கு நாட்கள் விடுமுறை தினங்களை கொண்ட கடந்த சனிக்கிழமை மட்டும் 60 ஆயிரம் வாகனங்கள் தென் அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துள்ளன.

இ​தேவேளை, கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில், கடந்த இரண்டு வருடங்களில், ஆகக் கூடுதலான வருமானம் கடந்த சனிக்கிழமையே ஈட்டப்பட்டுள்ளது. அன்றைய தினம் மட்டும் அந்த நெடுஞ்சாலையில் 38 ஆயிரம் வாகனங்கள் பயணித்துள்ளன.

இந்நிலையில், புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்திலிருந்து வௌி மாகாணங்களுக்கு கடந்த வாரம், மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டபோதிலும், பயணிகளின் வருகை குறைவாக இருந்தமையால், மேலதிக பஸ்களை குறைத்ததாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .