2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அப்பாவிக் கழுகுக்கு ஈவிரக்கம் இல்லா மனிதரின் கொடூரம்

Princiya Dixci   / 2016 மார்ச் 09 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சில மனிதர்கள், ஈவிரக்கமில்லா முறையில் ஒரு கழுகின் தோலை உரித்து, பின்னர் அதன் கால்களை வெட்டிக் கொல்ல முயலும் கட்சியின் புகைப்படமொன்று, சமூக ஊடகங்கள் மற்றும் நவீன வலைத்தளங்களில் வெகு வேகமாகப் பரவியுள்ளது. 

இந்தக் கொடுமையைக் கடுமையாக விமர்சித்துள்ள வன ஜீவராசிகள் நிறுவனங்களான 'சுதந்திர இலங்கை அறக்கட்டளை' (Freedom Sri lanka Foundation) மற்றும் 'அவர்களை வாழவிடு' (Let them live) ஆகியன தாவரங்கள் மற்றும் விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இவர்கள் மீது இரக்கமில்லாத விலங்குக் கொலைக் குற்றஞ்சாட்டி நடவடிக்கை எடுக்கவுள்ளதாகக் கூறியுள்ளன. 

'இந்தப் படத்தில் ஐந்து நபர்கள் உள்ளனர். இவர்கள், காலி - வஞ்சவல எனும் ஊரைச் சேர்ந்தவர்கள். இவர்கள், இந்த மனிதத் தன்மையற்ற செயலில் சுவாரஷ்யத்துடன் ஈடுபட்டுள்ளனர். கழுகு அழியும் நிலையில் உள்ள ஓர் இனம். இதைக் கொல்லவோ விற்கவோ முடியாது' என வன ஜீவராசிகள் செயற்பாட்டாளரான ஷஷிகலன ரத்வத்தே கூறினார். 

இந்தக் குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் தாம் கேட்டுள்ளதாக அவர் கூறினார். 

இந்தப் படத்தில் உள்ளவர்களைப் பற்றிய தகவல்களை 070-3303022, 071-3664019 ஆகிய இலங்கங்கள் ஊடாக அறிவிக்கும்படி குறித்த நிறுவனங்கள் கேட்டுள்ளன. 

இந்தக் குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் குற்றம் நிரூபிக்கப்படின் 05 வருடங்கள் வரை சிறைத்தண்டனை வழங்கப்பட முடியுமென வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0

  • Biruntha Thursday, 10 March 2016 03:07 AM

    Same think they did to Tamils

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .