2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அமெரிக்க மாநில துணை ஆளுநராக தமிழர் ஒருவரை நியமிக்க ஒபாமா தீர்மானம்

Super User   / 2010 மார்ச் 25 , பி.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க ஜனாதிபதி பெரக் ஒபாமா இலினொய்ஸ் மாநிலத்துணை ஆளுநராக தமிழர் ஒருவரை  நியமிக்க தீர்மானித்துள்ளார்.

அமெரிக்காவில் வாழும் தமிழரான ராஜா கிருஷ்ணமூர்த்தி எனப்படும் இவர் ஒபாமாவின் அரசாங்கத்தில் கொள்கை திட்டமிடல் ஆலோசகராக கடமையாற்றியுள்ளார்.

இலினொய்ஸ் மாநிலத்துக்கான ஆளுநர்,துணை ஆளுநர் பதவிகளுக்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ளது.

துணை ஆளுநராக ராஜா கிருஷ்ணமூர்த்தி தெரிவு செய்யப்பட்டால் அமெரிக்க மாநிலமொன்றில் இந்தப்பதவியை பெற்ற முதல் தமிழர் என்ற பெருமை இவரைச்சாரும்.

ஜனாதிபதி ஒபாமாவின் நீண்டகால நண்பரான ராஜா கிருஷ்ணமூர்த்தி ஒபாமாவின் தேர்தல் பிரசாரங்களில் கடந்த காலங்களில் முக்கிய பங்கெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .