2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அம்பியூலன்ஸில் பிறந்த சிசு

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 21 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்குரஸையில் பணியாற்றும் அவசர நேர மருத்துவ தொழில்நுட்பவியலாளர் ஒருவரும் அம்பியூலன்ஸ் சாரதியொருவரும், மாத்தறை வைத்தியசாலைக்குச் சென்றுகொண்டிருந்த அம்பியூலன்ஸினுள் சிசுவொன்று பிறப்பதற்கு உதவியுள்ளனர்.

ஓடிக்கொண்டிருந்த அம்பியூலன்ஸினுள், செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.30க்கு, வைத்தியசாலைக்குச் செல்லும் வழியில் குறித்த சிசு பிறந்துள்ளது.

குறித்த சிசுவின் தாயின் வீட்டுக்கு அதிகாலை 1.30 மணியளவில், குறித்த அம்பியூலன்ஸ் சென்றபோது அவர், பிரசவ வேதனையில் இருந்துள்ளார் என, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் அவசர சேவை அம்பியூலன்ஸ் பொறுப்பாளர் எல்.ஜி. காமினி தெரிவித்தார்.

"அது மிகவும் அவசர நிலைமையாக இருந்தது" எனவும் அவர் தெரிவித்தார்.

குறித்த பெண், சிசுவைப் பிரசவிக்கும் தருணத்துக்கு வந்துவிட்டார் என உணர்ந்த அம்பியூலன்ஸ் சாரதி, அம்பியூலன்ஸ்ஸை வீதியோரம் நிறுத்திவிட்டு, சிசுவைப் பிறப்பிக்க வைக்க, அவசர மருத்துவ தொழில்நுட்பவியலாளருக்கு உதவி செய்தார் என காமினி தெரிவித்தார்.

தாயும் சேயும் நலமாக இருந்த போதிலும், அவர்கள் மாத்தறை பொது வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தொழில்நுட்பவியலாளரும் சாரதியும் இவ்வாறான அவசர நிலைமைகளை எதிர்கொள்ளும் வகையில், இந்தியாவில் பயிற்றப்பட்டவர்கள் எனவும் காமினி தெரிவித்தார்.

இந்த அம்பியூலன்ஸ் சேவை, இந்திய அரசாங்கம் வழங்கிய 7.6 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் நிதியில் தொடங்கப்பட்டதுடன், இது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அனசரணையில் நடந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .