2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அரசியல் கைதிகள் விடுதலை: அமைச்சரவை பத்திரம் தயார்

Editorial   / 2019 நவம்பர் 09 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் கைதிகளை விடுப்பது தொடர்பான அமைச்சரவை பத்திரம் தற்போதும் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கும் அமைச்சர் மனோ கணேசன், சஜித் ஆட்சியில் அந்த பத்திரத்தை சமர்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். 

அதேபோல், எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துக்குள் இருந்து ஆதரவளிப்பது குறித்து சிந்திக்க வேண்டும் என்பதோடு, அமைச்சு பதவிகளையும் பெற்றுகொள்ள வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார். 

மட்டக்களப்பு களுதாவலை பொது மைதானத்தில் இன்று (09) ந​டைபெற்ற புதிய ஜனநாயக முன்னணியின் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், 

யுத்தத்தால் கி​ழக்கு மாகாண தமிழர்கள் பெரும் இழப்புகளை சந்தித்துள்ளதாகவும், ஜனாதிபதியை உருவாக்கிவிட்டு தமிழ் வேடிக்கை பார்க்கும் நிலைமை வேண்டாம் எனவும், தமிழ் மக்களுக்கும் சகல சலுகைகளும் கிடைக்க வேண்டும் என்றார். 

தமிழர்களின் வாக்குகளை பெற்றுகொடுத்துவிட்டுத்த  தமிழர்களுக்கு உரிய சலுகைகள் கிடைக்காதிருப்பதை வேடிக்கை பார்க்க விரும்பவில்லை எனத் தெரிவித்த அவர், அரசாங்கத்திடம் சண்டையிட்டாவது சலுகைகயை பெற்றுகொடுப்போம் என்றார். 

அதேபோல் எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தின் சனத்தொகையை பொருத்தே மாகாணத்துக்கான ஆளுநரை அமைச்சர் சஜித் நியமிப்பார் எனவும், கிழக்கு மக்கள் இழந்தவைகளை ஈடு செய்து சுபீட்சமான வாழ்வாதாரத்தை உருவாக்கிகொடுக்க வேண்டும் என்றார். 

அதேபோல் அண்மையில் கூறியதுபோன்று அரசியல் கைதிகளை விடுவிப்பது ​தொடர்பான அமைச்சரவை பத்திரம் தயார் நிலையில் உள்ளதெனவும், தேர்தல் வந்துவிட்ட காரணத்தால் அதனை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க முடியாதுள்ளதாகவும் தெரிவித்தார். 

எவ்வாறாயினும் சஜித் பிரேமதாஸவின் ஆட்சியில் தான் அமைச்சராக இருக்க போவது உறுதியெனவும் அந்த அரசாங்த்தில் மேற்படி அமைச்சரவை பத்திரத்தை சமர்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். 

அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து எதிர்காலத்தில் ஒரு தமிழ் அமைச்சர் ஒருவரை தெரிவு செய்யபோவதாகவும் வாக்குறுதியளித்தார்.

  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X